Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1016.
பா¡¢சாதத்தைச் சார்ந்த, பவழத்தின் கொழுந்தை ஒப்பாள்
 மேருமாலினி என்பாள், அவ்வேந்தன் மாதேவி மிக்காள்
 வா¡¢வாய் அமிர்தம் அன்னாள், அமிர்தமாமதி என்பாள் ஆம்
 கார் ஒன்றோடு இரண்டுமின்போல் காவலன் கழுமி நின்றார்.
அவனது பட்டத்தரசியானவள் கற்பகமரத்தைச் சார்ந்த பவழக்கொடி போன்றவள், மேருமாலினி என்னும் பெயருடையவள். மிக்க நற்குணமுடையவள், அடுத்தவள் கடலமுதம் போன்றவள் அமிர்தமதி என்னும் பெயா¢னள் - மேகத்தில் இரண்டு மின்னல் கொடிகள் போல், இவர்கள் இருவரும் வேந்தனைப் பொருந்தி வாழ்ந்தனர்.

1017.
மகர ஏறு இரண்டு தோளால்; வா¡¢யுள் தி¡¢வதே போல்
 சிகரமால் யானையான், அத்தேவிமார் புயங்களாக
 நிகா¢லா இன்ப வெள்ளக்கடலிடை, நீந்தும் நாளுள்
 புகா¢லார் வானின் வந்து, இவ்விருவர்க்கும் புதல்வரானார்.
ஆண் மகரமீன் ஒன்று இரண்டு செதிள்களால் கடலில் மகிழ்ச்சியுடன் நீந்துவதுபோல், மிகப்பொ¢ய யானைகளையுடைய அரசன் தனதுஇருமனைவியரும் இரண்டு தோள்களாக, நிகரற்ற இல்லறக்கடலிலே, இன்பமாக நீந்துகின்றபோது - குற்றமற்றவர்களான, தித்யாபவனும், பவணேந்திரனும் தேவருலகினை நீத்து வந்து, இரண்டு தேவியர்க்கும் பிள்ளைகளாகத் தோன்றினர்.

1018.
மாலினிதன்கண் ஆதித்தாபன், மாமேருவானான்
 பாலன மொழி மதிக்கண், பவணன் மந்தரனும் ஆக
 வேலையைச் செறிந்த ஆழிபோல் களிசிறந்து வேந்தன்
 ஞாலத்துக்கு இடரைத் தீர நடக்கும் கற்பகத்தை ஒத்தான்.
மேருமாலினி வயிற்றிலே ஆதித்யாபன் மேரு என்னும் பெயருடைய மகனாயினான். பால்போன்ற இனிய மொழிபேசும் அமிர்தமதிக்கு பவணதேவன் மந்தரன் என்னும் புத்திரனாயினான். இதனால் கரைகளை மோதும் கடல் அலைபோல், அரசன் மகிழ்ச்சியால் பொங்கி உலகிலுள்ளவர் வறுமை தீருமாறு கற்பகத்தைப் போல் வா¡¢ வழங்கினன்.

1019.
மங்கையர் கொங்கை என்னும் குவட்டினின்று இழிந்து நல்ல
 சிங்கபோதகங்கள் போலத் தவிசிடைத் தவழ்ந்துசென்று
 பங்கயத் தலங்கள் போலும், பவழச்சீறடியைப் பாரா
 மங்கை தன் சென்னி சூட்டி நடந்திட்டார் மாலையாக
அந்தப் பிள்ளைகள் இருவரும் தாய்மார்களது மார்பகங்களாகிய மலை முகடுகளிலிருந்து இறங்கி, அ¡¢ய சிங்கக் குட்டிகள்போல் பூந்தவிசுகளில் நடைபயின்று தாமரைமலர் போல் மென்மையான, பவழம்போல் சிவந்த பாதங்களைப் பார்மகளின் சென்னியில் பொருந்தி முறையாக நடை பயின்றனர்.

1020.
நாவிளம் கொம்பின் நல்ல கலையல்குல் நலத்தை உண்டு
 மாவிளம் களிறு தேர் வாள் வில்தொழில் வல்லராகித்
 தேவிளம் குமரர் போலத் தேசொடு திளைக்கும் மேனிக்
 கோவிளம் குமரர் காமன் குனிசிலைக்கு இலக்க மானார்.
அடுத்த அந்த அரசிளங் குமரர்கள், நாவிலே உறையும் இளங்கொடி போன்ற நாமகளின் நலமாகிய கலைகளைக் கற்று யானை, குதிரை, தேர் இவை தொடர்பான போர்த்தொழில்களைப் பயின்று வில்வித்தையில் தேர்ந்து தேவகுமாரர்களைப் போல், பொலிவுடன் விளங்கும் மேனியராய், மன்மதன் இலக்கிற்கான இனிய பருவமாகிய வாலிபப் பருவத்தை அடைந்தனர்.

  ஸ்ரீ விஹாரச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page