Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
975.
யோகங்கள் மூன்றும் சிந்தையுடன் செலவடங்கி ஊற்று
 மோகங்கள் முதுகிட்டு ஓட முனிமையை முகடு கொண்டு
 நாகங்கள் நடுங்க நோற்று ஆராதனை நான்கின் நீங்கிப்
 போகங்கள் புகழலாற்றா பம்மநற் கல்பம் புக்கான்.
முனிவராகநின்ற அவன் மனவசன காயங்கள் மூன்றையும் தர்மத்தியானத்தில் செலுத்தி, மோகனீய கர்மங்கள் தோன்றாவண்ணம் அவற்றை வென்று முனிவரது ஒழுக்கத்தை முழுமையாக ஏற்று, தனது தவப்பெருமையைக் கண்டு விண்ணவர் பொ¢தும் போற்றும் அளவிற்கு உயர்ந்து நான்குவித ஆராதனை தியானத்தோடு உடலை நீங்கி பெரும் போகங்களை நல்கிடும் பிரம்ம கல்பத்து தேவனாயினன்.

976.
தன்னுள்ளே நின்று தன்னைத் தான் நரகத்துள் உய்க்கும்
 தன்னுள்ளே நின்று தன்னைத் தான துறக்கத்து வைக்கும்
 தன்னுள்ளே நின்று தன்னைத் தான் தடுமாற்றுள் உய்க்கும்
 தன்னுள்ளே நின்று தன்னைத் தான் சித்தி அகத்துவைக்கும்.
தனக்குள் அசுபோப யோகத்தில் நிலைத்து நின்று, அச்சிந்தனை காரணமாகத் தானே தன்னை நரகங்களிலே செலுத்தும். அதே ஆன்மா தனக்குள் சுபோப யோகத்தில் நிலைத்து நின்று தானே தனக்கு அமர வாழ்வு பெற வைக்கும். தனக்குள் தானே சுபாசுப யோகத்தில் நின்று தன்னை நான்கு கதிகளில் சுழலச் செய்யும். நிச்சய நயத்தால் சுத்தோப யோகத்தில் நிலைத்து நின்று வினைகளை அறவே ஒழித்து சித்தலோகத்தே வைக்கும்.

977.
என்னும் இம்மொழிக்கு இலக்காய் வந்தனம் இதனைக் கண்ட
 பின்னும் நல்லறத்தைத் தேறார் பேதைமை ஆதியார்கள்
 பன்னகர்க்கு இறைவ பஞ்சாணுத்தரம் புக்க பைந்தார்
 மன்னவன் வச்சிராயுதன் காண் வந்து சஞ்சயந்தன் ஆனான்.
என்று கூறப்படும் ஆகமப் பொருளுக்குச் சான்றாக நாம் இவ்வாறு தோன்றி வந்தோம். இவற்றைக் கேட்ட பின்பும், நல்லறத்தைத் தெளியாதவர்கள் அறியாமைக்கு முதன்மையானவர்களாய், மோகனீய கர்ம உதயத்திற்கு உ¡¢யராவர். பவணர்களின் தலைவனே பஞ்சாணுத்தரமென்னும் அகமந்திர உலகில் இருந்த சிம்மசேன மன்னன் மண்ணுலகில் வச்சிராயுதன் என்னும் அரசனாகி பின்பு, சஞ்சயந்தனாகித் தோன்றி துறந்து தபோபலத்தால் வீடு பெற்றான்.

978.
பாகொத்த மொழியினா ரோடு இன்பத்துப் படிந்து சீதாமா
 கற்பத்து இழிந்து மைந்தன் சயந்தனாய் வளர்ந்து மாய
 போகத்துக்கு இவா¢ச் சித்தி புகுது நற்காட்சிபோக
 நரகத்துக்கு இறைமை பூண்ட நம்பி நின் வரவு இதுஎன்றான்.
பாகுபோல் இனிக்கும் மொழியினராகிய தேவமாதர்களுடன் இன்பத்தில் படிந்து, சீதாமாவாக இருந்த பிரம்ம கல்பத்து தேவன் அங்கிருந்து வந்து சயந்தன் என்னும் பெயருடையவனாய் வளர்ந்து, நிலையற்ற இல்லற இன்பத்தை விரும்பி, வீட்டினை நல்கும் நற்காட்சியானது நீங்க பவண லோகத்துக்குத் தலைவனாகிய நம்பியே உனது வரவு இத்தன்மையதாகும் என்று ஆதித்யாபன் கூறினான்.

979.
சேகு ஒத்த மனத்து வேடன் தீவினை துரப்பச் சென்று
 மாகவி பெற்ற அந்த ஆயுவும் கழிந்து மண் மேல்
 நாகத்தில் தோன்றி மூன்றாம் நரகத்துப்புக்குத் தீமை
 வேகத்தில் விலங்கில் ஐந்து பொறியுளும் சுழன்று செல்வான்.
மரத்தின் வயிரம் போன்ற மனத்தினையுடைய அதிதாருணன் என்னும் வேடன், பாபகர்மம் துரத்த யுள் முடிந்த மாகவி என்னும் ஏழாம் நரகத்தில் வீழ்ந்து அந்த ஆயுளும் ஒழிய இவ்வுலகில் பாம்பாகப் பிறந்து தீவிரப் பா¢ணாமத்தால் மீண்டும் மூன்றாம் நரகம் அடைந்து, மறுபடியும் தாவரம், விலங்கு கதிகளில் உழன்று, ஐம்பொறியுடைய பிராணிகளாகவும் பிறவி எடுக்க அந்த வாழ்வும் முடிந்து,

  பிறவி முடிச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page