Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
935.
மாற்றிடைச் சுழன்று வாழும் உயிர்கட்கு வந்து செல்வம்
 தோற்றின,தொடரல்,மாய்தல் இயல்பு நீ கவல வேண்டா
 மாற்றுதற்கா¢ய துன்பம் பொ¢தென்று,மயங்கவேண்டா
 மாற்றுதற் கெளிது கீழ்கீழ் நரகத்து அவ்வியல்பு அறிந்தால்
நாற்கதிகளில் உழலும் உயிர்களுக்கு,உ¡¢ய செல்வங்கள் உண்டாவதும்,சேர்ந்திருப்பதும்,நீங்கிவிடுவதும் சாதாரண நியதியாகும். இது குறித்து கவலை அடைதல் வேண்டாம். முன்பு அனுபவித்த இன்பங்களை இழந்து இப்போது தீராத் துன்பத்தில் சிக்குண்டேனே எனக்கலங்கவேண்டாம். உனக்குக் கீழேயுள்ள நரகங்களில் வீழ்ந்த உயிர்கள் அடையும் துன்பங்களை நீ அறிந்தால்,உனது இத்துன்பத்தைத் தாங்குதல் மிகவும் எளிதாகும்.

936.
ஏழுள நரகம் நாமம் இரதனம்,சக்கவாலு
 வாழிய பங்கம் த{மம் தமத்தமம் தமத்தமாகும்
 பாழி இந்தகங்கள் சேணி,பகிணகம தொகுப்பு வந்தஅவ்
 ஏழினும் புக எண்பத்து நான்கு லக்கங்களாமே.
நரகங்கள் ஏழின் பெயர்களைக் கேள். இரத்தினப் பிரபை,சக்கரப் பிரபை,வாலுகாப்பிரபை.,பொ¢தாகிய பங்கப்பிரபை,த{மப்பிரபை,தமப்பிரபை,தமத்தமப் பிரபை என்பனவாகும். இவற்றுள் வலிமைமிக்க இந்தகங்களும்,சேணிபந்தங்களும் பிரகீர்ணங்களும் சேர்ந்து மொத்த எண்ணிக்கை ஏழுநரகங்களிலும் எண்பத்து நான்கு லட்சம் ஆவாசங்களாகும் (இருப்பிடங்கள்).

937.
ஒன்று மூன்று ஐந்தும் ஏழும் ஒன்பதும் பத்தோடொன்றும்
 நின்ற மூன்றோடு பத்து நிரையத்துப் புரைகள் மேன்மேல்
 ஒன்று மூன்று ஏழு பத்து ஒருபத்தேழு இருபத்தீ¡¢ன்
 நின்ற மூன்றோடு முப்பான் ஆழி கீழ் புரை தோறாயு
நரகங்களில் ஏழாம்நரகத்தில் ஒருபுரையும்,ஆறாம் நரகத்தில் மூன்று புரைகளும் ஐந்தில் ஐந்தும்,நான்காவதில் ஏழும்,மூன்றாம் நரகத்தில் ஒன்பது புரைகளும்,இரண்டாவதில் பதி¦¡ன்றும் முதல் நரகத்தில் பதின்மூன்று புரைகளும் அமைந்துள்ளன. முதல் நரகத்தில் பதின்மூன்றாவது புரையில் உள்ளவர்களுக்கு ஆயுள் ஒரு கடலாகும். இரண்டாவது கீழ்ப்புரையில் ஆயுள் மூன்று கடலாகும். மூன்றாவது கீழ்ப்புரையில் ஏழு கடல்களும்,நான்காவது கடைசிப் புரையில் பத்து கடல்களும்,ஐந்தாவது ஈற்றுப்புரையில் பதினேழுகடல்களும்,ஆறாவது நரகத்தில் கீழ்ப்புரையில் இருபத்திரண்டு கடல்களும்,ஏழாம் நரகத்தில் முப்பத்து மூன்று கடல்களும் ஆயுள் அளவாகும்.

938.
முதலாம் நரகத்தில் முதல் புரையில்
 பதினாயிரம் ஆண்டுகளாம் சிறுமை
 விதியான் மிகையாயுகம் மேலன கீழ்
 பதியார் பரமாயுகம் அல்லனவாம்.
முதல் நரகத்து முதல் புரையில் உள்ளாரது குறைந்த ஆயுள்,பதினாயிரம் ஆண்டுகளாம். முறையாக மேல் புரையில் உள்ளவர்களின் உயர் ஆயுள் அடுத்த புரையில் உள்ளவர்களின் குறைந்த ஆயுளாக அமையும்.

939.
முழம் மூன்று உயர்வாம் முதலாம் புரையின்
 முழம் மூன்று வில்லேழ் விரலாறுள கீழ்
 எழுவாயிதைஞ் ஞூறு வில்லெய் தளவும்
 வழுவாது இறுதொறும் இரட்டியதாம்.
முதல் நரகத்து முதல் புரையில் உள்ளோர் உயரம் மூன்று முழம். பதின்மூன்றாம் புரையில் உயரம் ஏழேமுக்காலே வீசம் வில்லளவாகும். அடுத்து தொடர்ந்து அனைத்து நரகங்களின் புரைகள் தோறும் இரட்டித்துச் சென்று ஏழாம் நரகத்தில் உள்ளவர்கள் உயரம் ஐந்துந{று வில்லளவாகும்

  நிரையத்துள் அறவுரைச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page