Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
6.
மணிமுடி கவித்து வேந்தன் மன்னவர் தன்னைச் சூழ
 அணியினோடிருந்தவே போல் அயங்கியங் கடலும் தீவும்
 தணிவில் சூழ்மேரு வென்னும் தடமுடி கவித்துச் சம்பூ
 வணியினோடிருந்த தீபத்தரசன தகலத்து அம்பொன்
அழகிய மணி முடியைத் தா¢த்த மன்னர் மன்னன் வேந்தர்கள் தன்னைச் சூழ்ந்திருக்க அழகுடன் நாளோலக்கம் இருந்தது போல் 'சம்பூ' என்னும் பெருந்தீவானது (நாவலந்தீவு) மேருமலை என்னும் மகுடத்தைத் தா¢த்து கணக்கற்ற கடல்களாலும், தீவுகளாலும் சூழ விளங்கியது. அத்தீவின் மையப் பகுதியில்,

7.
திருவெனத் திகழ்ந்து செம்பொன் மலையினைச் சேர்ந்து தீர்த்தம்
 மருவியே செல்லும் கந்தமாலினி என்னும் நாடு
 விரவிலா விதேகர்க் கென்றும் உறையுளாய் விதேகநாமம்
 மருவியநாட்டுச் சீதோதகை வடதடத்திலுண்டே.
சீதோதகை என்னும் நதியின் வடக்குப் பகுதியில் இல்வாழ்க்கையில் ஆர்வமில்லாத பிறவியைப் போக்கும் முனிவர்களுக்கு இருப்பிடமாகிய விதேகம் என்னும் தேசத்தில் உள்ள மேரு மலைச்சாரலிலே, திருமகளைப் போன்று அனைத்து நலன்களையும் எய்தி எக்காலத்தும் குறைவில்லாத அறம் தழைக்கின்ற 'கந்தமாலினி' என்னும் நாடு உள்ளது.

8.
ஐஞ்சிறப்பு அயரும்தேவர் நால்வகைக் குழுவோடம்பொன்
 இஞ்சி சூழ்ந்திலங்கும் ஏழுநிலத்திறை இருக்கை வட்டம்
 அஞ்சிலம்பார்கள் ஆடல் அறிவன தெழுச்சியாதி
 எஞ்சிடா அந்தநாட்டின் பெருமையார் இயம்ப வல்லார்.
மூன்று பொன்மதில்களால் சூழப்பட்டதும், ஏழுவகைச் சுற்று நிலங்களையுடையதும், ஐந்து வகையான சிறப்புக்களை நடத்தும் நான்கு வகைத் தேவர்கள் நிறைந்திருப்பதும், மூன்றுலகநாதனாகிய இறைவன் எழுந்தருளி இருப்பதுமாகிய 'சமவசரணம்' என்னும் அற்புத ஆலயமும், அழகிய சிலம்பணிந்த தேவ மகளிர் ஆடலோடு கூடிய இறைவனது திரு உலாவும் குறைவற இருக்கும் அந்த 'கந்தமாலி

9.
மணியிலா மலையுமில்லை வனப்பிலா வனமுமில்லை
கணியிலா நிலமுமில்லை கரும்பிலாக் காடுமில்லை
அணியிலா மகளி¡¢ல்லை அழகிலா மைந்தா¢ல்லை
துணிவிலாத் துறவுமில்லை தூய்திலா ஒழுக்கமில்லை.
அந்த நாட்டில் இரத்தினங்கள் இல்லாத மலைகள் இல்லை, எழிலற்ற சோலைகள் இல்லை, விளைவற்ற நிலங்கள் இல்லை, கரும்பிலா காடுகளில்லை. அழகும் பண்புமற்ற மகளிரோ மைந்தரோ இல்லை, உறுதியற்ற ஒழுக்கக் குறைவான துறவியர் இல்லை.

10.
கற்பிலா மகளி¡¢ல்லை கருணையில்லாரு மில்லை
பொற்பிலா அறமும்இல்லை போதம் இல்லாருமில்லை
தற்கமில்லாரும் இல்லை தானமில்லாருமில்லை
சொற்கண் மெய்யிலாத இல்லை தூயரல்லாருமில்லை
அந்த நாடடில் கற்பு நெறியற்ற பெண்களோ, அருளற்ற ஆடவரோ இல்லை; அரைகுறையான தரும சிந்தனையாளர்களோ முழுமையான நூலறிவு இல்லாதவர்களோ இல்லை, நல்லதோர் உரையாடல்களை நால்வகை தானங்களைச் செய்யாதவர் இல்லை, உண்மையற்ற சொற்களைப் பேசுவோர் இல்லை, தூய்மையற்றோர் யாரும் இல்லை.

  வைசயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page