Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
221.
என்றலும் உரக ராசன் இறந்தநாள் பிறவி தோறும்
 சென்றிவன் செய்த வெல்லாம் செப்பெனத் தேவராசன்
 நின்றுநின் வெகுளிவெப்பம் கருணையால் அவித்து நின்று
 வென்றவர்ப் பணிந்துவா நீ வினவிய துரைப்பன் என்றான்.
என்று ஆதித்யாபதேவன் கூறியதைக் கேட்ட தரணேந்திரன், முன் பிறவிகளில் இந்த விஞ்சையன் செய்த தீமைகளை எல்லாம் கூறும்படி வேண்ட கல்பவாசிதேவன் தரணேந்திரனை நோக்கி, உன்னுடைய கோபத்தீயை அருளாகிய நீரால் தணியச் செய்து வினைகளை வென்ற இறைவனை வணங்கி வருவாயாக! பிறகு நீ விரும்பியவற்றை வி¡¢வாகச் சொல்லுகின்றேன் என்றான்.

222.
என்றலும் நின்ற கோபத்து எ¡¢மழை இடருற்றாற் போல்
 அன்று அவன் சொன்ன இன்சொல் மா¡¢யால் அவிந்தது ஆங்கண்
 சென்றது தெளிவு சிந்தை சினவரன் சரணம் மூழ்கி
 நின்றனன் கமலம் ஆதித்தாபன் நேர் பட்டதொத்தே.
என்று கூறியவுடனே எ¡¢யும் நெருப்பானது மழையால் தணிந்தது போல் அவனது கோபத்தீயானது ஆதித்யாபனது அறிவுரை என்னும் மழையால் அடங்கியது. அவனது உள்ளத்தில் தெளிவு தோன்றியது. எனவே சிந பகவானின் பாதங்களை வணங்கி மீண்டும் வந்து கதிரவனுக்கு முன்னால் மலர்ந்து நிற்கின்ற கமல மலரைப்போல் ஆதித்யாபன் எதி¡¢லே நின்றான்.

223.
நின்றவன் தன்னை நோக்கி முனிவனும் நீயும் நானும்
 மின்திகழ் தந்த னோடும் விரும்பிய மனத்த ராகிச்
 சென்ற அப்பிறவி தொட்டு வந்தனம் இன்று காறும்
 ஒன்றும் எஞ்சாமை கேள்நீ உரைக்கின்றேன் உரகர் கோவே.
அமைதியாக நின்ற தரணேந்திரனை நோக்கி, தரணேந்திரனே! வீடுபெற்ற முனிவனும், நீயும், நானும் இந்த வித்துத்தந்தனை மிகவும் விரும்பியவர்களாய் இருந்த பிறவி முதல் இன்று வரை நிகழ்ந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறுகின்றேன் கேட்பாயாக! என ஆதித்யாபன் கூறத் தொடங்கினான்.

  சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page