Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
888.
வீழ்ந்தஅக் கணத்துத் தண்டால் விழுப்பற வதுக்கியிட்டுச்
 சூழ்ந்தவர் உருக்கும் செம்பின் குட்டுவத்து உடம்பு காட்டிட்டு
 ஆழ்ந்தவன் தன்னை வாங்கிச் செக்கிலிட் டரைத்திட்டு ஆற்ச்
 சூழ்ந்தமுள் இலவ மேற்றித் துயரங்கள் பலவும் செய்தார்.
விழுந்த அந்தக் கணமே அங்குள்ள பழைய நரகர்கள், இவன் கொடுமை ஒழியுமாறு தடிகளால் தாக்கி அடித்து உருகிய செப்புக் குழம்பில் உடலை அமிழ்த்தி அதில் துடிக்கும் அவனை மீண்டும் இழுத்து செக்கில் போட்டு அரைத்து உடல் நொறுங்குமாறு ஆட்டி மிக நெருக்கமான முட்களையுடைய மரத்தின் மேல் ஏறும்படிச் செய்து இத்துடன் பல்வேறு விதமாக வாட்டினார்கள்.

889.
பாவைதான் அடித்த பந்தில் பாவிதான் புகையைஞ் ஞாற்றை
 ஓவிலா தெழுந்து வீழ்ந்து ஐஞ்ஞூறு வில் உயர்ந்துடம்பால்
 தாவிலாத் துன்ப முற்றான் தன்னிலை தளர்க்கொ ணாத
 ஆயுவால் ஆங்குப் பெற்ற ஆழி காலத்தை எல்லாம்.
அவனுக்கு அமைந்த ஆயுள் காலத்தின் அளவைக் குறைக்க முடியாத நிறை நாள் பெற்று தனக்கு¡¢ய கடற்காலம் முழுமையும் ஐநூறு வில் உயரம் ஆகாயத்தில் கிளம்பி தலைகீழாக விழுந்து இந்த நிலையில் மாற்றமின்றி துன்பமுற்றான்.

890.
ஆர்வத்தால் ஒருவன் ஆனை ஆயினான் ஒருவன் நின்ற
 வேரத்தால் நரகத் தாழ்ந்தான் விளம்பிய இலார்கள் இன்ப
 பாரத்தை முடியச் சென்றார் பன்னகர்க் கிறைவ பாராய்
 ஆர்வம் செற்றங்க ளின்றிப் பகைநமக் கில்லை கண்டாய்.
ஆசையால் சிம்ம சேன மன்னன் யானையாகப் பிறந்தான். அவன் மீது கொண்ட வைரத்தால் சத்தியகோடன் நரகத்தில் மூழ்கினான், விருப்பு வெறுப்பில் சமநிலை பெற்ற மற்றவர்கள் இன்பங்கள் அனைத்தும் எய்தினார்கள். பவணலோகத் தலைவனாகிய தரணேந்திரனே! நமக்கு ஆசை, செற்றம் பகைவர்களைத் தவிர வேறு பகை இல்லை. இதை எண்ணிப்பார் என ஆதித்யாபன் கூறினான்.

  வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page