Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
809.
சிந்திப் பா¢ய குணத்தோய்நீ தேவ ரேத்தும் திறலோய்நீ
 பந்தம் பா¢யும் நெறியோய்நின் பாத கமலம் பணிவாருக்கு
 அந்தம் இல்லா இன்பத்தை அளித்து முத்தி அகத்திருந்தும்
 எந்தை பாதம் பணிவார் இவ் வுலகம் பணிய வருவாரே.
மேலும் நீ சிந்தித்தற்கா¢ய சிறப்பான குணங்களையுடையவன், அமரர்கள் ஏத்தும் தகுதி பெற்றவன். கர்மங்க¨க் களைந்தெறியும் மும்மணி நெறி நின்றவனே! உமது அடிமலரை அடைந்தவர்களுக்கு அந்தமிலா இன்பத்தை அளித்து வீட்டுலகில் சேர்க்கும் இறைவனே! உமது பாதங்களைப் பணிவோர் இவ்வுலகம் வணங்கும் நிலையடைவார்கள் என அமரர் போற்றினர்.

810.
மலர் மழை பொழிந்து மா¡¢ முகிலென வந்து வானோர்
 அலைகடல் முகிலோ டொன்றி முழங்குவ தனையது என்ன 
 உலகுடை இறைவன் பாதம் உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி
 நிலையிலாப் பிறவி நீங்கு நெறியினால் துதிகள் சொன்னார்.
மேலும், நால்வகை தேவர்களும் கற்பக மலர் மழை பொழிந்து மூவுலகத்தையும் ஒருங்கே அறியும் இறைவனாகிய சக்ராயுத பகவானின் பாதங்களை மனம், மொழி, காயங்கள் ஒன்றுபட பொருந்தி நிலையற்ற இந்தச் சம்சார பிறப்பானது நீங்கத் தக்க முறையில் கார்முகில் முழக்கம் போல தோத்திரங்களை இசைத்தனர்.

811.
ஆயிடை எண்பத் தஞ்சு வினைகெட்ட அக் கணத்தே
 போய் உலகுச்சி புக்கான் பொருந்திஎண் குணங்க ளோடும்
 தூய வான் மலர்சொ ¡¢ந்து துதித்துடன் அமரர் போனார்
 மாயமில் தவத்தி னான் வச் சிராயுதன் வணங்கிப் போனான்.
அந்தச் சூழ் நிலையில், எஞ்சிய எண்பத்தைந்து அகாதி வினைகளும் அகன்றன, அக்கணத்தே பொருந்திய எண்வகைக் குணங்களுடன் உலகத்தின் உச்சியைச் சேர்ந்தான்; மலர்கள் தூவி அர்ச்சித்து பா¢ நிர்வாணப் பூசையை முடித்து அமரர்கள் சென்றனர். அங்கிருந்த வச்சிராயுத முனிவனும் பூசையை முடித்துத் தனியராய் தவ வனம் புக்கார்.

812.
வணிகனாய் தருமம் மேவி மன்னனாய் மாத வத்தால்
 இணையிலாக் கேவச் சத்துள் அமரனாய் இங்கு வந்து
 தணிவிலாத் தவத்தின் மாற்றை எறிந்து சக்கராயு தன்போய்
 இணையிலா உலகம் புக்கான் இதுஅறத் தியற்கை யாமே.
முற்பிறவியில் பத்திரமித்திரன் என்னும் வணிகனாய் இல்லறத்தில் வழுவாது நின்று மறு பிறவியில் சிம்மச்சந்திர மன்னனாகப் பிறந்து மாதவம் இயற்றி இணையிலா அகமிந்திர அமரனாகி மீண்டும் மனிதனாகத் தோன்றி குறைவற்ற தவமியற்றி பிறவியை ஒழித்த சக்ராயுதன் முன் சென்றறியா முக்தி உலகெய்தினான். ஜினதர்மத்தின் இயல்பு இதுதான்.

  சக்ராயுதன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page