ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும், மகத்தான அவரது சிறப்பு அம்சங்களும்

இத்தலைப்பின்கீழ் ஆசாரிய குந்த குந்தருக்கு கூறப்படும் திரு;பெயர்கள், அதன் காரணங்கள், அவர் பெற்றிருந்த சதுரங்குலாத்தி, விதேஹம் சென்று வந்த நிகழ்ச்சி, ஊர்ஜயந்த (கிர்நார்) கியில் நிர்க்ரந்த (திகம்பர) தர்மத்தை நிலைநாட்டல், பிற்கால ஆசாரியர்கள் குந்த குந்தருக்கு சூட்டிய புகழ்மாலை ஆகிய மகத்தான அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.


முதலில் ஆசாரிய குந்த குந்தருக்குக் கூறப்படும் 5 திருப்பெயர்களையும், அவற்றின் காரணங்களையும் பற்றி அறிவோமாக.


காஞ்சிபுரம் திரு. அனந்தநாத நயினார் அவர்கள் 'திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன ஸித்தாந்த விளக்கமும்' என்னும் தனது நூலில் ஆசாரிய குந்த குந்தருக்கு ஐந்து திருப்பெயர்கள் இருந்ததற்கான ஆதாரத்தைக் கீழ்வரும் சுலோகம் மூலம் எடுத்துக்காட்டுகிறார்.

ஆசார்ய குந்த குந்தாக்யோ, வக்ரக்வோ மஹா முனி:
ஏலாசார்யோ க்ருத்தபிச்ச பத்மநந்தீதி தந்நுதி:

இந்த சுலோகத்திற்கு அவரே கூறும் பொருள்: மிக்க ஞானத்தை உடைய, குந்த குந்தர், வக்ரக்வர், ஏலாசாரியார் க்ரத்த பிச்சர், பத்மநந்தி ஆகிய திருநாமங்கள் பெற்ற யதிஸ்ரேஷ்டரான ஆசாரியரை ஸ்தோத்திரம் செய்யக்கடவர் என்பதாம்.

இந்த சுலோகத்தோடு ஒத்த மற்றொரு சுலோகம், நந்தி சங்கத்தோடு தொடர்புடைய விஜயநகர கல்வெட்டில் காணப்படுகிறது.* சுலோகம் இவ்வாறாகும்.

* ஆதாரம் 'தீர்த்தங்கள் மஹாவீர் உன்கீ ஆசார்ய பரம்பரா' டாக்டர் நேமிசந்த சாஸ்தி, பக்கம்-108

ஆசார்ய குந்தகுந்தாக்யோ, வக்ரக்வோ மஹாமுனி
ஏலாசார்யோ க்ருத்தபிச்ச இதிதந்நாம பஞ்சதா


இச்சுலோகத்தில் குந்த குந்தர், வக்ரக்வர், ஏலாசாரியர், க்ருத்தபிச்சர் என்ற நான்கு பெயர்களே உள்ளன. ஆனால் சுலோகத்தின் இறுதியில் 'இதி தந்நாம பஞ்சதா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பொருள் என்னவெனில் - 'இவ்வாறு அவருக்கு ஐந்து விதப்பெயர்கள்' என்பதாம். இங்கு 'அவருக்கு' என்ற இடத்தில் 'பத்மநந்தி' ஆசாரியருக்கு என்று பொருள்கொள்ளவேண்டும். ஏனெனில் அது அவருடைய முதல் பெயராகும். அவ்வாறே சந்திரகி தூணில் செதுக்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் கூறுகிறது.

தஸ்யான்வயே பூவிதிதே பபூவ ய: பத்மநந்தி ப்ரதமாபி தான:


பொருள் : அப்பரம்பரையில் புவியோர்களால் அறியப்பட்ட (அனைவராலும் நன்கு அறியப்பட்ட), பத்மநந்தி என்ற முதல் பெயரை உடையவர் தோன்றினார்.

இவ்வாறு பத்மநந்தி என்ற முதற்பெயருடன் மற்ற நான்கு பெயர்களையும் சேர்த்து ஐந்துவிதப் பெயர்களை உடையவர் குந்த குந்தர் என்று பொருள் காணவேண்டும்.

மேலும் நந்தி சங்க பட்டாவலியில் குந்த குந்தருக்கு 5 பெயர்கள் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அந்த பட்டாவளி சுலோகங்கள் பின்வருமாறு:

1) பட்டே ததீயே முனி மான்ய வ்ருத்தெள ஜினாதி சந்த்ரூ ஸமபூததந்த்ரூ
ததோபவத் பஞ்ச ஸநாமதாமா, ஸ்ரீபத்மநந்தி முனிசக்ரவர்த்தி:

2)ஆசார்ய குந்தகுந்தாத்யோ, வக்ரக்வோ மஹாமதி:
ஏலாசார்யோ க்ருத்தபிச்ச பத்ம நந்தீ விதாயதே


ஆசாரிய குந்த குந்தான் உரையாரியர்களுள் ஒருவரான ஸ்ரீ சுருதஸாகரசூயும் தன் உரையின் இறுதியில்-

'ஸ்ரீமத் பத்மநந்தி குந்தகுந்தாசார்ய வக்ரக் வாசார்யைலாசார்ய,
க்ருத்த பிச்சாசார்ய நாமபஞ்சக விராஜிதேனே,.'

என்று குந்த குந்தான் ஐந்து பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் ஆசாரிய ஸ்ரீக்கு ஐந்து பெயர்கள் உண்டு என்பது உறுதியாகிறது.

இனி, அந்த ஐந்து பெயர்களுக்கான காரணங்களைப் பற்றி சிந்திப்போமாக.

1) பத்மநந்தி :  ஆசாரிய குந்த குந்தர் தமது 11-வது வயதில் முனிதீட்சை ஏற்றபோது அவருக்கு பத்மநந்தி என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர் நந்தி சங்கத்தைச் சார்ந்த குமாரநந்தி (பிரபாசந்திர) ஆசாரியாடம் தீட்சை பெற்றிருக்கக்கூடும் என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது. பத்மநந்தி அவருடைய முதல்பெயர் என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கெளண்டேசன் முனிவரானபோது சூட்டப்பட்ட முதற்பெயர் பத்மநந்தி ஆகும்.

2) குந்த குந்தர் :  பத்மநந்தி முனிவர் தீட்சைக்குப் பிறகு தன்னுடைய ஆழ்ந்த ஆத்மானுபூதியாலும், அளவிலா ஆகம அறிவாலும், ஒப்பிலா ஒழுக்கநெறியாலும், தன்னிகால்லா தவவலிமையாலும் வெகு விரைவிலேயே ஆசாரிய பதவியை அடைந்தார். அவருடைய பல்வேறு ஆற்றல்களைக் கண்ட மக்கள், அவர் பெயரை விளிப்பதில் மாயாதைக்குறைவு என்று கருதி அவர் பிறந்த ஊரான கோண்ட குந்தபுரத்தைக் கருத்தில்கொண்டு கோண்டகுந்தர் என்று அழைத்திருப்பர். அதுவே பிற்காலத்தில் குந்த குந்தர் என்று மறுவி இருக்கக்கூடும்.

குந்த குந்தாசாரியர் ஸமந்தர பகவானைக் குந்தி குந்தி பஞ்சமுஷ்டியால் பலமுறை வணங்கியதால் அவருக்கு குந்த குந்தர் என்ற பெயர் வழங்கலாயிற்று என்று திரு. அனந்தநாத நயினார் அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஜெய்ப்பூல் தோன்றிய கவி பகத்ராம் சாஹ் என்னும் கவிஞர் தனது 'புத்தி விலாசம்' என்னும் நூலில் குந்த குந்தர் என்பதற்கு கீழ்கண்ட காரணத்தைக் கூறியுள்ளார்.

ஆசாரிய குந்த குந்தர், ஊர் ஜயந்தகியில் (கிர்நார்) திகம்பரசுவேதாம்பரர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ந்க்ரந்த (திகம்பர) தர்மமே உண்மையான மூல அறம் என்பதை நிலைநாட்டினார். அப்போது இவருக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிகள் சிலர் இவர் கமண்டலத்தில் கள்ளை நிரப்பிவிட்டு, ஆசாரியரை நோக்கி, 'நீ திகம்பரத் துறவியாக இருந்தும் கமண்டலத்தில் கள்ளை ஏந்தித் திகின்றாயே அது ஏன்?' என்று வினவ, ஆசாரிய ஸ்ரீயின் மகிமையால் சக்ரேஸ்வா தேவி அந்த கமண்டலத்தில் இருந்த கள்ளை (சாராயத்தை) அழகிய, நறுமணம் மிக்க குந்த என்ற பெயர்கொண்ட பூக்களாக மாற்றிவிட்டார். அப்போது அந்த பூக்களைக் கண்ட அங்கிருந்த மக்கள் 'குந்த மலர்கள்! ஆஹா! குந்த குந்த மலர்கள்' என்று கூற, பிறகு அதுவே அவருக்கு சிறப்புப் பெயராயிற்று என்று அக்கவிஞர் கூறியுள்ளார்.

மேற்கண்ட கருத்தைக்கூறும் அவரது இந்தி மொழியிலான செய்யுள் இவ்வாறாகும்-


தேவி குநு;த புஸ்ப நிதை, கமண்டல பாதியோ
தப்தை லாகே கஹன், முனிகுந்த குந்த ஹை
- புத்தி விலாஸ்.


பொருள்: தேவி குந்த மலர்களால் கமண்டலத்தை நிரப்பினாள். அது முதற்கொண்டு முனி குந்த குந்தர் என அழைக்கப்பட்டார்.

இவ்வாறு குந்த குந்தர் என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

3) க்ருத்தபிச்சர் :குந்த குந்தான் மற்றொரு பெயர் க்ருத்தபிச்சராகும். இப்பெயர் வழங்கக்காரணம் அவரது விதேஹ யாத்திரை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஆசாரிய ஸ்ரீ வான் வழியாக விதேஹம் சென்றபோது அவரது மயில் பீலிகை தவறி கடலில் விழுந்துவிட, அருகிலிருந்த தீவு ஒன்றில் காணப்பட்ட கழுகுகளின் இறகுகளையே பீலிகையாகக் கொண்டார் என்பர். எனவே அவருக்கு க்ருத்த (கழுகு) பிச்சர் (பீலிகையுடையவர்) என்ற பெயர் வழங்கலாயிற்று.

இதன்மூலம் காடுகளில், உதிர்ந்த மயிலிறகுகள் கிடைக்காதபோது முனிவர்கள், உதிர்ந்து கிடக்கும் வேறு பறவைகளின் இறகுகளையும் பீலிகையாக பயன்படுத்தலாம் என்று தொயவருகிறது.

www.jainworld.com