ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
 ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தான் நூல்களும் அவற்றின் உரையாரிசாயர்களும்

முன்பே கூறியபடி கால இழிவினால் சுருதஞானத்தை முழுமையாக அறிந்தோர் தோன்றாத நிலையில் முதன்முதலில் ஆசாரிய தரசேனர் காலத்தில்தான் இனி, செவிவழியாக ட்டறிந்து ஆகமத்தை காப்பாற்ற இயலாது, அதற்கு வாவடிவம் (எழுத்து வடிவம்) தரவேண்டும் என்று கருதலாயினர். அப்போது ஆசாரிய தரசேனர், பனிரெண்டாவது அங்கத்தின் ஒரு பிவான 'அக்ராயணி' என்னும் பூர்வத்தின் 5-வது வஸ்து அதிகாரத்தின் உட்பிவான 'மகாகர்ம ப்ரக்ருதி' என்னும் நான்காவது ப்ராப்ருதத்தை அறிந்திருந்தார். அதை அவர் தமது சீடர்களான புஷ்தந்த. பூதபலி மாமுனிவர்களுக்கு உபதேசித்தருள, அவர்களும் அவ்வுபதேசத்திற்கேற்ப ப்ராக்ருத மொழியில் 'ஷட்கண்டாகமம்' என்னும் நூலினை, ஜ்யேஷ்ட (ஆனி) சுக்ல (வளர்பிறை) பஞ்சமி (ஐந்தாம்நாள்) அன்று எழுதியருளினர். இவ்வாறு ஆகமம் முதன்முதலாக வாவடிவம் (எழுத்து வடிவம்) பெற்றது. அந்நான்னாளையே இன்றும் சுருதபஞ்சமி என்று கொண்டாடி, ஆகமத்தை வழிபடுகிறோம்.

சூத்திர வடிவிலான இந்நூலுக்கு தவலம், மகாதவலம், ஜெயதவலம் என்னும் மூன்று விவான உரைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றை முதல் சுருதஸ்கந்த பரம்பரை என்பர்.

ஆசாரிய தரஸேனருக்குப் பிறகு ஆசாரிய குந்த குந்தர் தனது குரு பரம்பரை வழியாக பனிரெண்டாவது அங்கத்தின் மற்றொரு பிவான 'ஞானப்ரவாத' பூர்வத்தின் பத்தாவது வஸ்து அதிகாரத்தில் மூன்றாவது ப்ராப்ருதத்தை (பாகுடத்தை) அறிந்திருந்தார். அதை ஆதாரமாகக்கொண்டு 84 பாகுட (ப்ராப்ருத) நூல்களை ஆசாரிய குந்த குந்தர் இயற்றி அருளினார். அவற்றுள் பல ஆன்மாவை மையமாக வைத்து எழுதப்பட்ட அத்யாத்ம நூல்கள் ஆகும். அவற்றைப் பின்பற்றி பிற்கால ஆசாரியர்கள் பல்வேறு ஆன்மீய நூல்களையும், உரை நூல்களையும் படைத்தருளினர். இவ்வாறு ஆசாரிய குந்த குந்தர் வழிவந்த இந்த சுருத பரம்பரையை இரண்டாம் சுருதஸ்கந்த பரம்பரை என்று வழங்குவர்.

ஆசாரிய குந்த குந்தரால் அருளப்பட்ட 84 பாகுட (ப்ராப்ருத) நூல்களுள் 52 நூல்களின் பெயர்கள் திரு> தி. அனந்தநாத நயினார் அவர்களால் எழுதப்பட்ட 'திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன ஸமய சித்தாந்;த விளக்கமும்' என்னும் நூலில் கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளன.

1. பஞ்சாஸ்திகாயம் 21. த்வாதச அணுவேக்கா
2. பிரவசனஸாரம் 22. தோயபாகுடம்
3. ஸமயஸாரம் 23.சரணபாகுடம்
4. தாசனபாகுடம் 24.  சமவாயபாகுடம்
5. சுத்தபாகுடம் 25. நயபாகுடம்
6. ஆசாரித்தபாகுடம் 26. ப்ரக்ருதிபாகுடம்
7. போதபாகுடம் 27. சூர்ணிபாகுடம்
8. பாவபாகுடம் 28.பஞ்சவர்கபாகுடம்
9. மோக்ஷபாகுடம் 29. கர்மவிபாகபாகுடம்
10.  ரயணஸாரம் 30. வஸ்துபாகுடம்
11. நியமஸாரம் 31. புத்திபாகுடம்
12. ஜோணிஸாரம் 32.பயத்தபாகுடம் (பயர்த்த)
13. கியாஸாரம் 33.  உத்பாதபாகுடம்
14. ராதனாஸாரம் 34. திவ்யபாகுடம்
15. லப்திஸாரம் 35. ஸிக்கபாகுடம்
16. க்ஷபணஸாரம் 36. ஜீவபாகுடம்
17. பந்தஸாரம் 37. சாரபாகுடம்
18.  தத்வஸாரம் 38. ஸ்தானபாகுடம்
19. அங்கஸாரம் 39. பிரமாணபாகுடம்
20. திரவ்யஸாரம் 40. லாபபாகுடம்
41.சூலிபாகுடம் 47. திருஷ்டிபாகுடம்
42. ஷட்தாசனபாகுடம 48.சித்தாந்தபாகுடம்
43. கமபாகுடம் 49. நிதாயபாகுடம்
44. பயாபாகுடம் 50. ஏயத்தபாகுடம்
45. வித்யாபாகுடம் (வித்தியா) 51. விஹயபாகுடம்
46. உகாதபாகுடம் 52. ஸாலம்மிபாகுடம்

இவ்வாறு 52 பாகுடங்களின் பெயர்களாகும். மீதமுள்ள 32 பாகுடங்களின் பெயர்கள் தொயவில்லை.

மேற்கண்ட 52 பாகுடங்களில் ஸமயபாகுடம், ரயணஸாரம், பஞ்சத்திகாய ஸங்கஹோ என்னும்இந்த ப்ராப்ருதத்ரயங்களும் (மூன்று பாகுடங்களும்) தம்ஸன பாகுடம், சாத்த பாகுடம், ஸத்தபாகுடம், போதபாகுடம், பாவபாகுடம், மோக்கபாகுடம், லிங்கபாகுடம், சீலபாகுடம் என்னும் இந்த அஷ்ட (எட்டு) பாகுடங்களும், ணியமஸாரம், பாரஸ அணுவேக்கா, ரயணஸாரம் ஆகிய மூன்றுடன் சேர்த்து 14 நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் முன்பு குறிப்பிடப்பட்ட அந்த 52 பாகுடங்களில் வராத சில நூல்களும் குந்த குந்தரால் அருளப்பட்டவை என்று கூறப்படுகின்றன. அவை -1. பத்திஸங்கஹோ (ஸித்தபக்தி முதலிய 8 பக்திகளை உள்ளடக்கியது) 2. பத்மநந்தி பஞ்சவிம்சதி 3. தத்வார்த்த சூத்திரம், 4. மூலாசாரம், 5. திருக்குறள் ஆகியனவாகும். ஆனால் இவற்றை குந்தகுந்தர் நூல் என்று கூறுவதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன

இவை தவிர பூதபலி-புஷ்பதந்த ஆசாரியர்களால் அருளப்பட்ட ஷட்கண்டாகமத்தின் முதல் மூன்று கண்டங்களுக்கு 12,000 சுலோக அளவு கொண்ட பாகர்மம் என்னும் பொய ஒரு உரை நூலையும் குந்த குந்தர் படைத்தருளினார்.* ஆனால் அவ்வுரை நூலும் இதுவரை கிடைக்கவில்லை. * ஆதாரம் - இந்திர நந்தி மாமுனிவர் அருளிய சுருதாவதாரம்.

www.jainworld.com