ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
 ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும் அவரது காலமும்

ஆசாரிய குந்த குந்தான் வாழ்க்கை வரலாற்றைப் போன்றே அவரது காலத்தையும் பிற்கால ஆசாரியர்களின் நூல்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் முதலிய பிறசாதனங்கள் வாயிலாகவும் அறிய வேண்டியுள்ளது. ஆசாரிய குந்த குந்தர் தம்மைப் பற்றி ஏதும் கூறாதது போலவே தாம் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. எனவே காலத்தைக் கணிப்பதிலும் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அனைவான் கருத்துக்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது ஆசாரிய குந்த குந்தான் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான மிகப்பொய கால எல்லைக்குட்பட்டதாக தொயவருகிறது. இருப்பினும் ஆசாரிய குந்த குந்தர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவராக இருக்கமுடியும் என்பதை அறிஞர் பெருமக்களின் கருத்துக்களுக்கிணங்க சுருக்கமாகக் காண்போகமா.

முதலில், டாக்டர் கே.வி. பாடக் அவர்களின் கருத்தைப் பார்ப்போம்.

டாக்டர். கே.வி. பாடக் அவர்கள், ஆசாரிய குந்த குந்தரை கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவராக கருதுகிறார். ஏனெனில் இராஷ்ட்ரகூட மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய மூன்றாவது கோவிந்த மன்னர் காலத்தில் வடிக்கப்பட்ட கி.பி. 797-802 ஆண்டுகளைச் சார்ந்த செப்புத்தகடுகள் உள்ளன. அவற்றிலுள்ள சுலோகங்களின் அடிப்படையில் திரு. பாடக் அவர்கள் ஆசாரிய குந்த குந்தரை ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்கிறார். அவர் எடுத்துக்காட்டும் அந்த சுலோகங்களுள் முதல் சுலோகம்* பின்வருமாறு :- ஆஸித் தோரணாசார்ய: கோண்டகுந்தான்வயோத்பவ: ஸ சைதத் விஷயே ஸ்ரீமான், சால்மலீக்ராமமாச்த:

இதன் பொருள் குந்த குந்த பரம்பரையில் தோன்றிய தோரணாசாரியார் சால்மலீ என்னும் கிராமத்தை அடைந்தார் என்பதாகும். * பிற சுலோகங்களை 'பிராப்ருதஸங்க்ரஹ' என்னும் நூலின் முன்னுரையில் பக்கம் 16-ல் காண்க.

இந்த சுலோகத்தின் கருத்துப்படி தோரணாச்சாரியர் குந்த குந்தான் பரம்பரையில் தோன்றியவர் ஆவார். அவர் காலம் கி.பி.678 ஆகும். எனவே ஆசாரிய குந்த குந்தர் ஏறக்குறைய கி.பி. 528-ல் தோன்றி இருக்கக்கூடும் என்று கணித்துள்ளார்.

மேலும், பஞ்சாஸ்திகாயத்தின் கன்னட உரையாசியர் பாலசந்திரரும், ஸம்ஸ்க்ருத உரையாரியர் ஜெயசேனரும் தத்தமது உரைகளில் சிவகுமார மகாராஜனை தெளிவிக்கும் பொருட்டு என்ற சொற்றொடரை ஆண்டுள்ளனர். அதைக்கொண்டு சிவகுமார அரசன், சிவம்ருகேசவர்மன் என்று கருதி சிவம்ருகேசவர்மனின் காலமாகிய கி.பி.528-ல் குந்த குந்தர் இருத்திருக்கலாம் என்ற மற்றொரு ஆதாரத்தையும்எடுத்துக்காட்டி திரு. பாடக் அவர்கள் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இனி, பண்டிட் நாதுராம் ப்ரேமீ அவர்களின் கருத்தைக் காண்போமாக.

பண்டிதர் நாதுராம் ப்ரேமீ அவர்களால் இந்திரநந்தி ஆசாரியான் சுருத அவதாரத்தை ஆதாரமாகக் கொண்டு, மகாவீரர் பாநிர்வாணம் அடைந்தபின் சுமார் 683 ஆண்டுகள் கழித்து ஆசாரிய குந்த குந்தர் தோன்றியிருக்ககூடும் என்று கூறியுள்ளார்.

இக்கருத்தை வலியுறுத்த அவர் மேலும் ஒரு ஆதாரத்தை அளிக்கிறார். அதாவது, ஆசாரிய குந்த குந்தர் தமது சூத்திர பாகுடத்தில் பெண்கள் முக்தி அடைய முடியாது, திகம்பரத்துறவிகளே உண்மையான அறவோர் என்று கூறியுள்ளதைக் கொண்டும், ஆசாரியர் குந்த குந்தர் காலத்தில் ஊர்ஜயந்தகியில் திகம்பர - சுவேதாம்பரர்களுக்கு இடையே வாதம் நடைபெற்றது என்று கூறுவதைக்கொண்டும், இவர்காலத்தில் சமணம் இரண்டாகப் பிந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார். ஆசாரிய தேவசேனான் தாசனஸாரம் என்னும் நூலின் 11-வது காதை அடிப்படையில் மாமன்னன் விக்ரமனின் மறைவிற்குப் பின் 136 அண்டுகள் கழிந்தபின்பே சமணத்தில் இருபிவுகள் தோன்றியது எனத்தொகிறது. எனவே இதைக் கணக்கில் கொண்டு பார்த்தாலும் ஆசாரிய குந்த குந்தர் மூன்றாம் நூற்றாண்டைச் சார்தவராகவே இருக்கவேண்டும் என்பது பண்டிதர் அவர்களின் கருத்தாகும்.

திரு. ஜுகல் கிஷோர் முக்தார் அவர்களும், இந்திர நந்தியின் சுருதாவதாரத்தையும், நந்திசங்க பட்டாவளியில் குறிப்பிட்டுள்ள ஆசாரிய பரம்பரையையும் கணித்து, பண்டிதர் நாதுராம் ப்ரேமீஜீ அவர்களின் கருத்தையே வலியுறுத்தி உள்ளார். எனவே இவரும் ஆசாரிய குந்த குந்தரை கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றே கருதுகிறார்.

இனி, பேராசியர் திரு. ஏ. சக்ரவர்த்தி நைனார் அவர்களின் கருத்தைக் காண்போமாக.

பேராசியர் அவர்கள் நந்திசங்க பட்டாவளியை ஆதாரமாகக்காட்டி ஆசாரிய குந்த குந்தரை முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்கிறார். மேலும் அவர் 'தக்ஷணதேசேமலயே,. த்ராவிட கணாதிபோ தீமான்' என் றஇந்த மந்த்ரலக்ஷண நூலின் சுலோகத்தைக்கொண்டு, குந்த குந்தர் திராவிட சங்கத்தைச் சார்ந்தவர் என்றும், சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹேமக்ராமம் (பொன்னூர்) தமிழகத்தில் உள்ளதால், ஆசாரியர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகிறார். 'அவருக்கு ஏலா ஏலேல சிம்மன்' என்ற மறுபெயரும் உண்டு. அவரே பொதுமறையாம் திருக்குறளையும் படைத்தவராவார். அவரது சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும் கூறுவர். திருக்குறளை அரங்கேற்றிய திருவுள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் என்றாயிற்று. மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்ற கருத்தும் பரவலாயிற்று என்பர். திருக்குறள் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்பதால் ஆசாரியர் குந்த குந்தர் காலமுமக்தே என பேராசியர் கூறுகிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களுக்கும் முற்பட்டது திருக்குறளாகும். கண்ணகிக்கோவில் கட்டப்பட்டபோது இலங்கையில் மன்னன் கஜபாகு என்பான் ஆட்சி புந்துவந்தான். திருக்குறள் இதற்கும் முற்ட்டதாகும் என்ற வரலாற்றையும் அவர் ஆதாரமாகக் காட்டகிறார்.

மேலும், பல்லவ அரசன் சிவஸ்கந்தன் ஆசாரிய குந்த குந்தான் உரையாரிசாயர்கள் குறிப்பிடும் சிவகுமாரனே ஆவான். ஏனெனில் ஸ்கந்தன் என்பதற்கு குமாரன் என்றும் பொருளாகும். அத்துடன் பல்லவ அரசர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தனர். அதன் தலைநகர் காஞ்சிபுரமாகும். அக்காலத்தில் காஞ்சியில் அறம் தழைத்து ஓங்கியது. பிராக்ருத மொழியில் அமைந்த 'மபோடபோலு' என்னும் தானபத்திரத்தை சிவஸ்கந்தன் வெளியிட்டு அம்மொழிக்கு பெருமை சேர்த்தான். குந்த குந்தர் நூல்களும் பிராக்ருத மொழியில் அமைந்தவை. இந்த ஒற்றுமையைக் கொண்டும் குந்த குந்தான் காலம் முதல் நூற்றாண்டாக இருக்கும் என்று பேராசியாயர் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பேராசியான் கருத்துப்படி குந்த குந்தான் பிற்பபு கி.மு.52-ம் ஆண்டு என்றும், கி.மு.8-ல் அவர் ஆசாரிய பதவியை அலங்காத்து 51 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார் என்றும் தொயவருகிறது. அவரது ஆயுட்காலம் 95 ஆண்டுகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்போது டாக்டர் ஏ.என். உபாத்யே அவர்களின் கருத்தை அறிவோமாக.
 
பேராசியரைப்போல டாக்டர் உபாத்யே அவர்களும் அசாரிய குந்த குந்தரை முதல் நூற்றாண்டைச் சார்ந்தவராகவே கருதுகிறார். ஆனால் அதற்கு இவர், பேராசியர் தரும் சான்றுகளை ஏற்கவில்லை. ஏனெனில், திருக்குறள் முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாக இருக்கலாம். ஆனால் அந்நூலை ஆசாரிய குந்த குந்தர்தான் இயற்றினார் என்பதற்கு தகுந்த ஆதாரம் ஏதுமில்லை. ஹேலாசாரியர் (ஏலேலசிம்மன்) குந்த குந்தரல்லாத வேறொரு ஜைனாசாரியராகவும் இருக்கலாம் என்பது இவரது கருத்து. அதேபோல பல்லவ அரசன் சிவஸ்கந்தனின் காலமும் திட்டவட்டமாகக் கூற இயலாது என்பதால் அதையும் ஆதாரமாகக் கொள்ளமுடியாது என்கிறார்.

ஆசாரிய குந்த குந்தர் முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதற்கு இவர்தரும் ஆதாரம் யாதெனில் சுருதகேவலி பத்ரபாகு சாலத்தில் சமணம் இரண்டானது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சுவேதாம்பர மதம் பரவ ஆரம்பித்தது. அது வலிமை பெற்று முழுமையாகப் பரவ சில ஆண்டுகாலம் ஆகியிருக்கலாம். ஆசாரிய குந்த குந்தர் முதன்முதலாக சுவேதாம்பரக்கொள்கைகளை வெளிப்படையாக மறுத்துள்ளதால் அவர்காலம் முதல் நூற்றாண்டாக இருக்ககூடும் என்று எடுத்துக்காட்டுகிறார்.*

மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் போதபாகுட காதையின் அடிப்படையில் குந்த குந்தரை சுருதகேவலி பத்ரபாகுவின் சீடராகவே ஏற்று சுருதகேவலி பத்ரபாகுவின் காலமாகிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் குந்த குந்தர் என்றும் கூறுவர்.

ஒப்பீடு: கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பூஜ்யபாதாசாரியர் தமது ஸர்வார்த்தஸித்தி என்னும்நூலில் ஆசாரிய குந்த குந்தான் படைப்பான பாரஸ அணுவேக்கா என்னும் நூலிலிருந்து 5 காதைகளை எடுத்து தனது கருத்துக்கு மேற்கோளாக சுட்டியுள்ளார். எனவே திரு. பாடக் அவர்கள் கூறுவதுபோல குந்தகுந்தர் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்என்பதற்கு அவர் கூறும் ஆதாரத்தை உற்று நோக்கும்போது, தோரணாசாரியார் குந்த குந்தர் பரம்பரையில் வந்தவர் என்றுதான் கூறப்பட்டுள்ளதேதவிர, குந்த குந்தர் தோரணாசாரியருக்கு எவ்வளவு முற்பட்டவர் என்பது அந்த சுலோகங்களில் குறிப்பிடப்படவில்லை, அவர் கூறும் இன்னொரு சான்று சிவகுமார மகாராஜனை தெளிவிக்க, குந்த குந்தர் நூல் இயற்றினார் என்பது. அதிலும் அவர் சிவகுமாரனை சிவம்ருகேசனாகக் கருதியே குந்த குந்தர் காலத்தை நிர்ணயக்கிறார். ஆனால் சிவகுமாரன் சிவம்ருகேசனே என்பதை நிரூபிக்க உறுதியான சான்றுகள் எதையும் தரவில்லை.

மேலும் 'வித்வத் ஜனபோதகம்' என்னும் நூலில் ஆசாரிய குந்த குந்தரை உமாஸ்வாமி காலத்தவர் என்று கூறப்பட்டுள்ளது.* அதன்படி குந்த குந்தர் நான்காம் நூற்றாண்டிற்கு முன்பே தோன்றியவர் என்பது உறுதியாகிறது.

ஆசாரிய குந்த குந்தருக்கு பிறகு தோன்றிய ஆசாரியர்களுள் பலர், தாங்கள் குந்த குந்தர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைந்துள்ளனர். இந்த குந்த குந்தர் பரம்பரை (குந்தகுந்தாம்னாயம்) என்ற சொல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை (466)ச் சார்ந்த மர்கராவின் செப்புத்தகட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜைன் சிலாலேக் சங்க்ரஹம் (ஜைனகல்வெட்டு தொகுப்பு) என்னும் நூலிலுள்ள 94 எண் கொண்ட கல்வெட்டிலும் சந்திரநந்தி என்னும் ஆசாரியரை தேசீய கண குந்தகுந்தான்வயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் குந்த குந்தர் தேசீய கணத்தைச் சார்ந்தவர்என்பது புலனாகிறது. இந்த தேசீய கணம் மந்திரலக்ஷணத்தில் கூறப்பட்டுள்ள திராவிட தேசீய கணமாகவும் இருக்கலாம். இந்த எண் 94 என்ற கல்வெட்டும் 5-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இதில் கோங்கணிவர்மன் மூல சங்கத்தைச் சார்ந்த சந்திரநந்தியின் அறவுரையைக் கேட்டு அறம் தழைக்கச் செய்தான் என்னும் செய்தி உள்ளது. இதன்படி ஆசாரிய சந்திரநந்தி குந்த குந்தர் பரம்பரையைச் சார்ந்தவர் என்பது தெளிவாகிறது. ஆசாரிய சந்திரநந்தியின் குரு பரம்பரை கீழ்கண்டவாறாகும்.

குணசந்திரர் - அபயநந்தி - சீலபத்ரர் - ஜயநந்தி - குணநந்தி - சந்திரநந்தி

சந்திரநந்திக்கு முன் இவரது குரு பரம்பரையில் ஐந்து ஆசாரியர்கள் தோன்றியுள்ளதை கல்வெட்டு எண்.94 எடுத்துக்காட்டுகிறது.

கி.பி.466-ஐ சார்ந்த மர்கரா செப்பு ஏடுகளையும், கல்வெட்டு எண்.94-ஐயும் ஒப்பிடுகையில் ஆசாரிய சந்தரநந்தி கி.பி.466-ல் வாழ்ந்தார் என்பதும், அவருக்கு முன் அவருடைய குரு பரம்பரையில் 5 ஆசாரியர்கள் தோன்றினார்கள் என்பதும், உறுதியாகிறது. இதன்மூலம் சந்தரநந்தி ஆசாரியான் குருபரம்பரையில் தோன்றிய 5 ஆசாரியர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்தவர் ஆசாரிய குந்த குந்தர் என்பது புலனாகிறது. அந்த 5 ஆசாரியர் காலத்தை 250 ஆண்டுகள் என்ற குறுகிற காலத்திற்கு உட்படுத்திப் பார்த்தால்கூட ஆசாரிய குந்த குந்தர் முதல் நூற்றாண்டைச் சார்ந்தவராகவே இருப்பார் என்று கருதலாம். பேராசியர் சக்ரவர்த்தி நைனார் அவர்களும் திரு. ஏ.என். உபாத்யே அவர்களும் குந்த குந்தரை முதல் நூற்றாண்டைச் சார்ந்தவராகவே கருதுகின்றனர் என்பதை முன்பே பார்த்தோம். மேலும் ஆசாரிய குந்த குந்தர் ஷட்கண்டாகமம் - நூலின் முதல் மூன்று கண்டத்திற்கு பாகர்மம் என்னும் மிகப்பொய உரைநூல் படைத்தருளினார் என்பதாலும், ஷட்கண்டாகமம் எழுதப்பட்டதற்கு முன் சுருதம் செவிவழியாகவே கேட்டு அறியப்பட்டு வந்ததாலும், ஷட்கண்டாகமத்திற்கு முன் எழுதப்பட்ட ஆகமம் கிடைக்கவில்லை என்பதாலும், ஆசாரிய குந்த குந்தர் ஷட்கண்டாகமத்தை எழுதி அருளிய புஷ்பதந்த, பூதபலி ஆசாரியர்களுக்கு பிற்பட்டவர் என்பது உறுதியாகிறது. எனவே போதபாகுட காதை அடிப்படையில் ஆசாரிய குந்த குந்தர் சுருதகேவலி பத்ரபாகுவின் காலத்தைச் சார்ந்தவர் என்று கூறுவதும் பொருத்தமாகத் தொயவில்லை.

அத்துடன், ஆசாரிய குந்த குந்தர்தான் முதன்முதலாக சுவேதாம்பர மதக்கொள்கைகளை வெளிப்படையாக கண்டித்துள்ளதால், அவர்காலத்தில் சுவேதாம்பரர் மதம் உருவாகி, அதன் கொள்கைகள் வரையறுக்கப்பட்டு, மிக வேகமாக பரவி இருக்கக்கூடும்.

இதை உற்றுநோக்கும்போது, சுருதகேவலி பத்ரபாகுவின் காலத்தில் வடநாட்டில் கடும் வறட்சி நிலவியபோது குஜராத் பகுதியில் தங்கிவிட்ட சில முனிவர்கள் வறட்சியின் கடுமை தாங்காமல் தங்கள் விருப்பம்போல் ஒழுகலாயினர். அவர்களுள் ஒருசிலர் வறட்சி நீங்கியபின் மீண்டும் உண்மை நெறிக்குத் திரும்பினர். ஆனால் வேறு சிலர் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பாமல், தங்கள் வசதிக்கேற்ப சில புதிய கொள்கைகளை மூல நிர்க்ருந்த (திகம்பர) மார்கத்தில் புகுத்தலாயினர். அக்கொள்கைகளே பின்பு சுவேதாம்பர கொள்கைகளாயின. அவற்றை பின்பற்றுபவர்கள் சுவேதாம்பரர்களாயினர். சுருதகேவலி பத்ரபாகுவிற்கு பிறகு இக்கொள்கைகள் உருவாக்கப்பட்டு, அது வலுவடைய ஓரு நாட்கள் போதாது, ஓரு நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இதன்படி பார்த்தாலும் ஆசாரிய குந்த குந்தர் சுருதகேவலி பத்ரபாகுவிற்குப்பிறகு 200 ஆண்டுகள் சென்றபின் தோன்றி இருக்ககூடும். அவ்வாறாயின் ஆசாரிய குந்த குந்தர் முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதே உறுதியாகிறது.

மேலும் நந்திசங்க பட்டாவளியில் ஆசாரிய குந்த குந்தர் கி.மு. 8-ம் ஆண்டு (விக்ரம் ஆண்டு 49) ஆசாரிய பதவியைப் பெற்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நாட்டைச் சார்ந்த பேராசியர் ஹார்ன்லே அவர்களும் நந்தி சங்க பட்டாவளியை ஆய்ந்து மேற்கண்ட கருத்தையே உறுதி செய்துள்ளர். அத்துடன் ஆசாரிய குந்த குந்தர் தமது 44-வது வயதில் ஆசாரிய பதவியை பெற்றார் என்றும், சுமார் 50 ஆண்டுகாலம் அப்பதவியை அலங்காத்தார் என்றும், அவர் ஆயுள் 95 ஆண்டுகள், 10 மாதங்கள், 15 நாட்கள் என்றும் தொய வருகிறது. அபிதான ராஜேந்திர கோஷ் மற்றும் சில கல்வெட்டுகள் வாயிலாகவும் இதே கருத்து உறுதியாகிறது.

இறுதியாக, மேற்கண்ட அனைத்து ஆதாரங்களையும் கருத்தில்கொண்டு, ஆசாரிய குந்த குந்தர்கி.மு.52-ல் பிறந்து கி.பி.44-க்கு உட்பட்ட காலத்தில் பாரதபூமியை அலங்காத்தார், என்று உறுதி செய்யலாம்.

www.jainworld.com