ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தான் பிறப்பிடமும் தபோ பூமியும்

இனி ஆசாரிய குந்த குந்தான் பிறப்பிடத்தைப்பற்றி காண்போம்.

'சுருதாவதாரத்தை' எழுதிய ஸ்ரீ இந்திர நந்தி ஆசாரியர் குந்த குந்த ஆசாரியரை குந்தகுந்தபுரத்தைச் சார்ந்தவர் என்று கூறியுள்ளார். அவ்வூர் இப்போதுள்ள ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த குண்டக்கல் என்பர். அவ்வூர் கூடூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 மைல் தூரத்திலுள்ளது. இது அனந்தபுரம் மாவட்டம் குடி வட்டத்தைச் சர்ந்த ஊராகும். இதன் பழைய பெயர் கோனகோண்டல் அல்லது கோண்டகுந்தே ஆகும். இவ்வூர் ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்ததாக இருந்ததால் குந்த குந்தர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் என்றும் கூறுவர்.

பெளிகுள கல்வெட்டு எண்.351-ல் குந்த குந்தரை ஸ்ரீகோண்டகுந்த என்ற குறிப்பிட்டிருப்பதாலும், இதுபோன்ற மேலும் சில சான்றுகளாலும் ஆசாரிய குந்த குந்தர் ஆந்திர மாநிலத்தின் குண்டக்கல் (கோதண்டகுந்த) என்னும் ஊல் பிறந்தார் என்பது ஆராய்ச்சியாளர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். கோண்டகுந்த என்ற இருபதங்களை உடைய இவ்வூருக்குப் பொருள் மலையூர் அல்லது மலை அணைந்த ஊர் என்பதாகும். கோண்ட, குந்த என்ற இப்பதங்களுக்கு குன்று (மலை) என்ற பொருளாம். புரம் என்றால் ஊர் என்பது யாவரும் அறிந்ததே. எனவே, கோண்டகுந்தபுரத்தை தமிழில் மலையணைந்த ஊர் (மலையனூர்) என்று கூறலாம். ஆசாய குந்த குந்தர் இவ்வூல் பிறந்ததால் அவரை கோண்டகுந்தர் என்று அழைத்திருக்கக்கூடும். அதுவே மருவி நாளடைவில் குந்த குந்தர் என்று வழங்கலாயிற்று என்பர். தென்னகத்தில் பெயருக்குமுன் தந்தைப் பெயர், ஊர்ப்பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடும் வழக்கம் பண்டை காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது. மாயாதை நிமித்தமாக பெயரை குறிப்பிடாமல் ஊர்ப்பெயரோடு 'ஆர்' விகுதி சேர்த்து விளிக்கும் மரபும் இருந்து வந்துள்ளது. உதாரணமாக முனைப்பாடியைச் சார்ந்தவரை முனைப்பாடியார்* என்று வழங்கி உள்ளதை நாம் அறிவோம். இப்போதும் அம்மரபுகள் வழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் ஆசாரிய குந்த குந்தர் கோண்டகுந்தபுரத்தைச் சார்ந்தவர் என்பது உறுதியாகிறது.

இவ்வூர் ஒரு காலத்தில் பொய நகரமாகவும் சமணப் பண்பாட்டின் மையமாகவும் திகழ்ந்தது எனலாம். ஊன் அருகில் 150 அடி உயர குன்று ஒன்று உள்ளது. அங்கு வேப்பமரம் ஒன்றும் உள்ளது. அம்மரத்தின் அருகில் மூன்றடி உயர முக்குடைகளுடன் கூடிய அரஹந்த பகவானின் இரண்டு கற்படிமைகள் உள்ளன. அந்த கற்சிலைகள் நின்ற வண்ணம் அமைந்துள்ளன. சிலைகளின் இருபுறமும் சாமரை வீசும் தேவர்களின் சிலைகள் உள்ளன. பகவான் சிலைகளுக்குக் கீழ் சின்னம் ஏதும் இன்மையால் இவை எந்த தீர்த்தங்கரர்களின் சிலைகள் என்று அறிய இயலவில்லை. சிலைகளைப் பாதுகாக்க மூன்று புறங்களிலும் 5 அடி உயர சுவர் ஏழுப்பப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் இவற்றை சித்த ஸ்வாமி என்று அழைக்கின்றனர். மேலும் வைதீக முறையில் பூஜையும் நடத்துகின்றனர்.

இங்கிருந்து சுமார் 30 அடிதூரத்தில் பாறை ஒன்றின்மீது ஜம்பூத்வீப ஓவியமும், மற்றொரு பாறையில் சுமார் 6 அடி உயரமுள்ள நின்ற நிலையிலான திகம்பர முனிவான் திருவுருவப் படமும் வரையப்பட்டுள்ளன. * முனைப்பாடியார் தமிழில் நீதிநூல் அருளிச்செய்த மகானாவார். அதன் அடிப்படையில் கல்லில் வடிக்கப்பட்ட தாமரைப்பூ உள்ளது. தாமரையை சமஸ்க்ருதத்தில் பத்மம் என்றும் கூறுவர். குந்த குந்தருக்கு பத்மநந்தி என்ற ஒரு பெயரும் உண்டு. எனவே இவ்வரைபடம் குந்த குந்தான் திரு உருவப்படமாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் இங்குள்ள சன்னகேஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஒரு பாறை உள்ளது. அதன்மீது அமர்ந்த நிலையிலுள்ள தீர்த்தங்கரர்களின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்பகுதியில் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. ஆனால் அது எளிதில் படிக்க இயலாத நிலையில் சிதைந்துபோயுள்ளது. கல்வெட்டின் துவக்கத்தில் ஜினேஸ்வரனின் துதியும், இவ்விடம் பத்மநந்தி பட்டாரகான் பிறப்பிடம் என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். மற்றொருபுறம் தெலுங்குமொழி கல்வெட்டும் உள்ளது. அன்றியும் கி.பி.7, 10, 11-ம் நூற்றாண்டுகளைச் சார்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அவற்றுள் பல சமணம் சார்ந்தவைகளாம். கி.பி.16-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில் நியாய சாஸ்திரத்தில் தலைசிறந்து விளங்கிய ஆசாரிய வித்யாநந்த சுவாமியைப் பற்றிய குறிப்பும் உள்ளது என்பர்.

இந்த ஊன் தென்புறத்தில் ஒரு பாறையில் மூன்றடி உயர திகம்பர உருவமும், அதனருகே உள்ள பாறையில் சமணம் சார்ந்த சின்னங்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று அவ்வூல் சமணம் ஒருவருமிலர் என்பது வியப்பூட்டும் செய்தியாகும். இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களைக்கொண்டு ஆசாரிய குந்த குந்தான் பிறப்பிடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோண்டகுந்தபுரம் என்பது தெளிவாகிறது.

இனி அப்பெரு மகனாரின் தபோபூமியைப்பற்றி பார்ப்போமாக.

ஆசாரிய குந்த குந்தர் தவம்புந்த இடம் நீலகி (பொன்னூர் மலை) என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால், ஆசாரிய குந்த குந்தர் வாழ்நாள் முழுவதும் நீலகியில் தங்கி தவம் செய்தார் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் திகம்பர துறவிகள் எப்போதும் ஒரே இடத்தில் தங்கி தவம் செய்வதில்லை. மழைக்காலத்தில் மட்டும் நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்குவர். எனவே ஆசாரிய குந்த குந்தரும் பல இடங்களுக்குச் சென்றிருக்கலாம். தமிழகத்தில் மயிலாப்பூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் தங்கி இருந்தார் என்றும், கர்நாடகம், ஆந்திரம், குஜராத் போன்ற வட-தென் மாநிலங்களுக்கும் விஜயம் செய்தார் என்றும் வரலாறு கூறுகிறது. எனவே நீலகியில் மட்டுமே இருந்தார் என்று கூறுவதற்கில்லை. இருப்பினும் அவர் நீலகியை (பொன்னூர் மலையை) மையமாகக்கொண்டு தவமியற்றி வந்தார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. மேலும் விதேஹம் சென்று வந்தது, அய ஆகமங்களை படைத்தருளியது, ஆகிய அற்புதங்கள் இந்த நீலகி (பொன்னூர் மலை) மண்ணில் நிகழ்ந்துள்ளதால் இந்த பூமி நமக்கு புனித பூமியாகவும், அனைவருக்கும் தீர்த்தக்ஷத்திரமாகவும் திகழ்கிறது.

ஆசாரிய குந்த குந்தர் நீலகியில் (பொன்னூர் மலையில்) இருந்தார் என்பதற்குச் சான்றாக திகழும் சுலோகம் இது என்பர்.

தக்ஷணதேசே மலயே ஹேமக்ராமே முனிர்மஹாத்மாஸீத் ஹேலாசார்யோ நாம்நா த்ராவிட கணாதீச்வரோ தீமான் - மந்த்ரலக்ஷணம்.

இந்த சுலோகம் ஜ்வாலாமாலினி மந்தரலக்ஷணம் என்னும் நூலில் வந்துள்ளதாகக் கூறுவர்.

இதன் பொருள் தென்னாட்டில் பொதிகை தென்றல் தவழும் பொன்னூல், திராவிட கணத்திற்குத் தலைவரும், மேதாவியும், மகாமுனிவருமான ஹேலாசாரியார் இருந்தார் என்பதாம்.

மேலும் இங்குள்ள மலைமீது நீண்டு விந்து காட்சியளிக்கும் மிகப்பழமை வாய்ந்த திருவடிகளும், பொன்னூர் கிராமத்திலுள்ள கல்வெட்டுகளும் குந்தகுந்தர் இங்கு தவம் புந்ததற்குச் சான்றாக அமைந்துள்ளன.

பொன்னூர் மலைமீது திகழும் ஆசாரிய குந்த குந்தான் பாதம் பொன்னூர்மலை பற்றியச் செய்தியினை முதன்முதலில் கேள்வியுற்ற ஆராவைச் சேர்ந்த திரு. தரணேந்திரதாஸ் என்னும் வடநாட்டவர் 1922-ம் ஆண்டு 'ஆரா' (பீகார்)விலிருந்து இங்கு வந்து மலையில் அமைந்துள்ள திருவடிகளை வழிபட்டு மகிழ்ந்தார். போக்கூரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்நாளில், முன்பின் அறிமுகமில்லாத வேறு மொழிபேசும் ஒருவர் சாயான முகவாயுமின்றி இவ்வளவுதூரம் வந்தார் என்றால் அது ஒரு சாதனையே ஆகும். சாயான முகவா இல்லாத காரணத்தால் முதலில் அவர் கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள நீலகிக்குச் சென்று திரும்பியுள்ளார். மேலும் அவர் இம்மலையடியில் ஒரு ஆசிரமும் அமைய வழிவகுத்தார். இவ்வகையில் நாம் வாழும் இம்மண்ணில் தவம் புந்த ஆசாரிய குந்த குந்தர்மீது வடநாடடவர் கொண்டுள்ள பெருமதிப்பையும், பேரவாவையும் இங்கு பாராட்டாமல் இருக்க இயலவில்லை.
அவருக்குப் பிறகு இங்கு வடநாட்டவர் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கினர். சோன்கட் (குஜராத்) என்னும் ஊரைச் சார்ந்தவரும் ஆசாரிய குந்த குந்தான் ஆழ்ந்த பக்தருமான திரு. கான்ஜீ அடிகளார் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இருமுறை (1958, 78) இங்கு வந்து தாசித்து, உள்ளம் நெகிழ்ந்து போயினார்.
அப்போதெல்லாம் மலைமீது ஏற வசதியான படிகள் கிடையா. வழி கரடுமுரடாகவே இருந்துவந்தது. ஆனால் அதன்பிறகு ஸ்ரீ 108 குந்த குந்தாசாரிய தபோகி கமிட்டியின் பெருமுயற்சியால் மலைமீது ஏறபடிகள் அமைக்கப்பட்டன. இப்போது இம்மலை அடிவாரத்தில் மூன்று நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை

1. ஆசாரியர் குந்த குந்தர் கல்வி நிறுவனம், சன்ஸ்க்ருதி மையமும்
2. ஆதிநாத திகம்பர ஜைன் ஸ்யாத்வாத மந்திர் டிரஸ்ட்
3. விசாகாசாரியர் தபோ நிலையம்

இந்த மூன்று நிறுவனங்களிலும் திகம்பர ஜினாலயங்களும், தொலைதூர அறஆர்வலர்கள் தங்கி ஆன்மநலம் பெற தங்கும் வசதியும், உணவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இப்போது நான்காவதாக திருக்குறள் ஆராய்ச்சி மையமும் துவங்கி உள்ளது.

இவை தவிர குந்த குந்தர் கல்வி நிறுவனத்தால் செயல்படும் ஆசாரிய குந்த குந்தர் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) நிலையமும், பிற சமயத்தவரால் நடத்தப்படும் திருவள்ளுவர் பொறியியல் கல்லூயும் இம்மலையடியில் இயங்கி வருகின்றன. ஆசாரிய குந்த குந்தர் கல்வி நிறுவனத்திலிருந்தும், விசாகாசாரியர் தப நிலையத்திலிருந்தும் முறையே அருகன் தத்துவம், சுருதகேவலி என்னும் மாத இதழ்கள் வெளிவருகின்றன. இவை தவிர மேலும் பல அறப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மலை உச்சியிலுள்ள ஆசாரியர் பாத கமலங்களுக்குத் தை மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியூர் சமணப் பெருமக்களால் மலைபூஜை என்னும் திருவடி பூஜை மிகப்பொய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இந்தத்திருவடி பூஜையில் கலந்துகொண்டு ஆன்ம நலன் பெற்றுவருகின்றனர். மேலும் 'மந்திபுஷ்பம்' என்னும் பூஜையும் நடைபெறுகின்றது. அந்த பூஜையில் திரு. சமந்தபத்ர சாஸ்தியார் அவர்களால் கம்ஸ்க்ருத மொழியில் வெளியிடப்பட்ட ஆசாரிய குந்த குந்தான் அஷ்டோத்தர சதநாமாவலி (108 பேர்வழி) பூஜையும் நடைபெறுகிறது. இதுவரை குந்த குந்தான் பிறப்பிடம், தபோ பூமி ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம்.

www.jainworld.com