ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும் அவரது குரு பரம்பரையும்

ஆசாரிய குந்த குந்தரைப்பற்றி முழுமையாக அறிய இயலாதது போலவே அவரது குருவைப்பற்றியும் முழுமையாக அறிய இயலவில்லை. இருப்பினும் ஆசாரிய குந்த குந்தர் 'போதபாகுடம்' என்னும் நூலில் தமது குருவைப் பற்றிய ஒரு குறிப்பைத் தந்துள்ளார். அதை உணர்த்தும் காதைகள் பின்வருமாறு :-

1) ஸத்த விஆரோஹஓ, பாஸாஸத்தேஸ ஜம்ஜிணே கஹியம் ஸோதஹ கஹியம் ணாயம், ஸீஸேண ய பத்தபாஹஸ்ஸ 61

2) பாரஸ அங்க வியாணம், சவுதஸ புவ்வங்க விஉல வித்தரணம் ஸயணாணி பத்தபாஹ, கமயகுரு பயவஒ ஜயஓ 62

பொருள் : 1) ஜினேந்திரனால் அருளப்பட்டது எதுவோ, அதுவே மொழி வடிவ சூத்திரங்களில் சொல்வடிவமாக அமைந்துள்ளது. அது பத்ரபாகுவின் சீடனால் (பத்ரபாகுவின் சீடனாகிய என்னால்) எவ்வாறு அறியப்படடதோ அவ்வாறே கூறப்பட்டது.

2) பன்னிரு அங்கங்களையும், பதினான்கு பூர்வங்களையும் முழுமையாகவும் விவாகவும் அறியும் 'கமககுரு' (ஞானகுரு) பகவான் பத்ரபாகுவுக்கு வெற்றி உண்டாகட்டும்.

இங்கு, முதல் காதையில் பத்ரபாகுவின் சீடன் என்று குறிப்பிட்ட ஆசாரியர், அடுத்த காதையில் பத்ரபாகுவை கமககுரு அதாவது ஞானகுரு என்று கூறியுள்ளார். இந்த காதைகளின் அடிப்படையில் ஒருசிலர் கேவலி பத்ரபாகுவை, ஆசாரிய குந்த குந்தான் குரு என்றும், அவர் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) குந்த குந்தர் வாழ்ந்தார் என்றும் கூறுவர். ஆனால் இங்கு அவர் சுருதகேவலி பத்ரபாகுவை ஞானகுரு என்றுதான் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தொயவருவது யாதெனில், சுருதகேவலி பத்ரபாகுவால் அருளப்பட்ட ஆகம ஞானம் அவருடைய சிஷ்ய பரம்பரை வாயிலாக ஆசாரிய குந்த குந்தருக்கு கிடைத்திருக்கும். அந்த அடிப்படையில் பத்ரபாகுவை ஞானகுரு என்று அழைத்திருக்கலாம் என்பதாம். ஏனெனில் குந்த குந்தருடைய நூல்களின் உரையாசியர்களுள் ஒருவரான ஆசாரிய ஜெயசேனர் பஞ்சாஸ்திகாயத்தின உரையில் குமாரநந்தி ஸித்தாந்த தேவரை குந்த குந்தான் குருவாக அறிவித்துள்ளார். எனவே பத்ரபாகு ஞான குருவாகவும் குமார நந்தி நேர்முக குருவாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும் நந்தி சங்க பட்டாவளியில் குந்த குந்தான் குரு பரம்பரை கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் பத்ரபாகு - குப்திகுப்தர் - முதல் மாகநந்தி - ஜினசந்திரர் - குந்த குந்தர்

இதன்படி நோக்கின் குந்த குந்தான் குரு ஜினசந்திரராவர். ஆனால் ஜயசேன ஆசாரியர் குமார நந்தியைக் குந்தகுந்தான் குருவாகக் கூறியுள்ளார். இவ்விரு ஆசாரியர்களுள் குந்த குந்தான் குரு யார்? என்ற வினா எழுகிறது. ஒருவேளை ஜினசந்திரர் அழைக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறாயின் இருவரும் ஒருவரே ஆவர். கருத்து வேறுபாட்டிற்கிடமில்லை. அவ்வாறு இல்லையெனில் குமாரநந்தி வித்யாகுருவாகவும், ஜினசந்திரர் தீட்சை குருவாகவும் இருக்கக்கூடும்.

மேலும், ஆசாரிய குந்த குந்தரை மூல சங்கத்தைச் சார்ந்தவர் என்றும், திராவிட கணத்தைச் சார்ந்தவர் என்றும், நந்தி சங்கத்தைச் சார்ந்தவர் என்றும் மூவிதமாக குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணங்களை இப்போது காண்போமாக.

பகவான் மகாவீரர் காலத்தில் சமண சமய சாதுக்கள் 'நிர்க்ரந்தர்கள்' என்று அழைக்கப்பட்டனர். பெளத்த த்பிடகங்களில் (நூல்களில்) மகாவீரரை 'நிகண்ட நாட்' (நிர்க்ரந்த நாதர்) என்று கூறப்பட்டுள்ளதும், பெளத்த மதத்தைப் பின்பற்றி வாழ்ந்த அசோகப் பேரரசனின் கல்வெட்டுகளிலும் 'நிகண்ட' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதுமே இதற்குச் சான்றுகளாகும். இதுவே சுருதகேவலி பத்ரபாகு வரை தொடர்ந்து வந்துள்ளது. அதுவரை சமண சமயத்திலும் எந்தவித பிளவும் ஏற்படவில்லை. ஆனால் சுருத கேவலி பத்ரபாகுவிற்குப் பிறகு ஏற்பட்ட பிளவின் காரணமாக நமது சமயம் இரண்டாகப் பிந்தது. அப்போது மூல நிர்க்ரந்த பரம்பரையைப் பின்பற்றியவர்களை 'நிர்க்ரந்த மகாசாது சங்கதை'ச் சார்ந்தவர்கள் என்றும் சுவேதாம்பரர்களாக மாறியவர்களை 'வெண்ணிற ஆடை மகாசாது சங்கத்தைச்'ச் சார்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நிர்கிரந்த மாமுனிவர்கள் மூல அறத்தைப் பின்பற்றி வந்ததால் அவர்களை மூலசங்கத்தை சார்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் கிடைத்துள்ள கி.பி.4-ம் நூற்றாண்டைச் சார்ந்த சிவம்ருகேச மன்னனின் கல்வெட்டு எண்.89-ல், சமண சமய சாதுக்களை, 'ச்வேத பட மகாச்ரமண சங்க' என்றும், 'நிர்க்ரந்த மகாச்ரமண சங்க' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ச்வேத பட மகாச்ரமண சங்க' என்றால், வெண்ணிற ஆடை (அணிந்த) மகாசாது சங்கம்' என்றும், 'நிர்க்ரந்த மகாச்ரமண சங்க' என்றால் 'நிர்கிரந்த (பாக்ரஹமற்ற-பற்றற்ற-திகம்பர-ஆடை அணியாத) மகாசாது சங்கம்' என்றும் பொருளாகும். இதன் மூலம் சமண சமயத்தில் ஏற்பட்ட பிளவிற்குப் பிறகுதான் சாதுசங்கத்தில் பிவு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். அதோடு நிர்க்ரந்த திகம்பர தர்மமே மூல தர்மம் என்பதும் நன்கு புலனாகிறது.

இவ்வாறு ஏற்பட்ட சங்க பேதம் காரணமாக மூலதிகம்பர தர்மத்தில் மேலும் பிளவுகள் ஏற்படக்கூடாது என்றெண்ணி, நாடு முழுவதிலுமிருந்த சாதுக்களை நான்கு கணங்களாகப் பிந்து, அவற்றிற்கு (1) திராவிட கணம் (தேசியகணம்) (2) சேனகணம் (3) காலோக்ரகணம் (4) பலோத்கார கணம் என பெயாட்டனர். இந்நான்கும்நந்தி சங்கம், சேன சங்கம், வீரசங்கம், தேவசங்கம் (காஷ்டாசங்கம்) என்ற சங்கங்களாக இயங்கிவந்தன. அந்த சங்கங்களைச் சார்ந்த முனிவர்களுக்கு ந்தி, சேனர், வீரர், தேவர் என்னும் பட்டப் பெயர்களும் வழங்கப்பட்டன.

நந்தி சங்கப் பட்டாவளியின் படி ஆசாய குந்த குந்தர் நந்தி சங்கத்தைச் சார்ந்தவராவார். எனவேதான் அவர் பத்மநந்தி என்றும் அழைக்கப்படுகிறார். நந்தி சங்கம் தேசிய கணம் என்னும் திராவிட கணத்தைச் சாந்தது. ஆசாரிய குந்த குந்தர் திராவிட கணத்திற்குத் தலைமை தாங்கி வந்ததால் அவரை திராவிட கணத்தைச் சார்ந்தவர் என்பர்.

மேலும் அவர் மூலநிர்க்ரந்த பரம்பரையைப் பின்பற்றியவர். புதிதாக ஏற்பட்ட சுவேதாம்பர பரம்பரையைக் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, ஊர்ஜயந்தகியில் (குஜராத்தில்) திகம்பர-சுவேதாம்பரர்களுக்கிடையே ஏற்பட்ட விவாதத்தின்போது திகம்பர தர்மமே மூலநிர்க்ரந்த தர்மம் என்பதை நிலைநாட்டினார். எனவே அம்மகானை சங்க பேதங்களுக்கெல்லாம் அப்பாற்றபட்ட மூல சங்கத்தைச் சார்ந்தவர் என்று அனைவரும் போற்றலாயினர். மூலநிர்க்ரந்த சாதுசங்கத்தை பிற்காலத்தில் சுருக்கமாக மூலசங்கம் என்று அழைத்துள்ளனர்.

எனவே ஆசாரிய குந்த குந்தர் திராவிட கணத்தைச் சார்ந்தவர் என்றாலும், நந்திசங்கத்தைச் சார்ந்தவர் என்றாலும், மூலசங்கத்தைச் சார்ந்தவர் என்றாலும் அதில் கருத்து வேற்றுமை ஏதுமில்லை என்பதை அறியவும்.

மேலும் மேற்கண்ட கல்வெட்டுச் சான்றுகள் மூலம், பகவான் மகாவீரர் போற்றிய அறம் நிர்க்ரந்த தர்மம் என்னும் பற்றற்ற திகம்பர ஜைன அறமே ஆகும் என்பதும் அதுவே தொன்மையான மூல அறமுமாகும் என்பதும் உறுதியாகிறது. இதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை எனலாம்.

    தஸ்யான்வே பூமிதிதே பபூவ ய: பத்மநந்தி: ப்ரதமாபிதான:
      ஆசார்ய குந்த குந்தாத்யோ வக்ரக்வோ மஹாமதி
  ஏலாசார்யோ நாமா த்ராவிட கணாதிபோதீமான்

     கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சார்ந்த கங்கவம்ச அரசன் அவினீதனின் கல்வெட்டு எண்.90 மற்றும் 94-ல் மூல நிர்கிரந்த பரம்பரையை மூலசங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

www.jainworld.com