ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும் அவரது வாழ்க்கைச் சார்ந்த கதைகளும்

(2) தோத்திரப்பகுதி

தோத்திரத்திற்கு முன்பாக இந்த தோத்திரம் பற்றி கூறப்பட்டுள்ள ஒரு கதையை இப்போது பார்ப்போம். குந்த குநு;தர் பிறப்பிடமான கோண்டகுந்தபுரத்தை தலைநகரமாகக்கொண்ட குண்டக்கல் இராஜ்ஜியத்தில் மந்தாலசா என்னும் அரசி இருந்து வந்தார். அவ்வரசி ஜினதர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராவார். எனவே தமக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஜினவறமாகிய ஆன்ம அறத்தில் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அப்போது அவ்வரசிக்கு, குந்த குந்தான் தாயார் குந்த குந்தருக்குப்பாடிய தாலாட்டுப்பாடலும், அதனால் குந்த குந்தர் அடைந்த மேன்மையும் நினைவுக்கு வர, அதன் அடிப்படையிலேயே தமக்குப்பிறந்த ஆறுகுழந்தைகளுக்கும் குழந்தைப் பருவத்திலிருந்தே, தாலாட்டுப்பாடி தூய ஆன்ம நெறியை ஊட்டியருளினார். கபடமில்லா அச்சிறு குழந்தைகளும் சிறு வயது முதல் கேட்ட அந்த அறத்தை ஏற்று உயர்ந்த பண்பாட்டோடு வாழ்ந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் இல்வாழ்க்கையிலும், அரசவைபவத்திலும் ஆர்வமற்றவர்களாகி அவற்றை உள்ளுணர்வோடு துறந்து துறவறநெறியை ஏற்று ஆன்ம சுகமாகிய போன்ப சுகத்தை எய்தினர்.

குழந்தைகளின் இந்நிலையைக்கண்டு கவலையுற்ற அரசன், தனக்குப்பிறகு அரசாட்சிக்கு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை அரசியிடம் வெளிப்படுத்தினான். அரசியும் மன்னனின் கவலையைப் புந்துகொண்டு, அதைப்போக்கும் விதத்தில், இனி பிறக்க இருக்கும் ஏழாவது குழந்தை அரசாட்சிக்கு வாரிசாக அமையும் என மிகுந்த நம்பிக்கையோடு கூறினார். அரசனும் அது எங்ஙனம் என வியப்புடன் வினவ அரசியும், இதுவரை பிறந்த குழந்தைகளுக்கு சிறுவயது முதல் தாலாட்டி ஊட்டப்பட்ட தூய ஆன்ம நன்னெறியே அவர்களை துறவற வாழ்க்கைக்கு அழைத்துச்சென்றது. இனி பிறக்க இருக்கும் குழந்தைக்கு இல்லறத்தையும், அரச தர்மத்தையும் ஊட்டி வளர்ப்பேன், அதன் மூலம் அக்குழந்தை தங்கள் கவலையைப் போக்கும் என்றார். அதைக்கேள்வியுற்ற அரசன் மனைவியின் திறம் வியந்து தனக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை எண்ணி உள்ளம் பூத்துப்போயினான். மேலும் அவன் நீ பாடிய அந்த தாலாட்டு யாது? என்று வினவ, அரசியும் அந்த தாலாட்டைப்பாடி அரசனுக்கு அதன் பெருமையை எடுத்துரைத்தார்.

'மந்தாலசா' என்னும் அந்த தோத்திரத்தில் எட்டு செய்யுள்கள் உள்ளன. எனவே அதை அஷ்டகம் என்று கூறலாம். தோத்திரம் தூய ஆன்மாவை அடிப்படையாகக்கொண்டதாகும். ஒவ்வொரு ஆன்மாவும் சக்தி அடிப்படையில் சித்த பரமேட்டிக்கு ஒப்பானதாகும். எனவே அவ்வாற்றலை அறிந்து செயல்பட்டு போன்பத்தை அடையவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதைப்படிக்கும் தாய்மார்கள் இனியாவது தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இதுபோன்ற தாலாட்டையும், ஆன்ம அறப்பண்பாட்டையும் ஊட்டிவளர்த்து, தாமும், தங்கள் குழந்தைகளும் போன்பத்தை அடைய முயற்சிப்பார்களாக.

மந்தாலசா தோத்திரம்

1. ஸித்தோஸி புத்தோஸி நிரஞ்ஜனோஸி,
ஸம்ஸார மாயா பாவர்ஜிதோஸி
சார பின்ன ஸ்த்யஜ ஸர்வ சேஷ்டாம்,
மந்தாலஸா** வாக்யமுபாஸ்வ புத்ர

பொருள் : (புத்ர) மகனே நீ (சித்தோஸி) அதாவது ஆன்மாவின் பரமவிசுத்தி நிலை எதுவோ அதுதான் உன்ஸ்வரூபம், அனந்த தாசனம், அனந்த ஞானம், அனந்த சுகம் மற்றும் அனந்த வீயம் எனும் இயல்புகுணங்களுக்கு உறைவிடமானவன் நீ, (புத்தோஸி) அறியப்படும் பொருள்கள் அனைத்தையும் அறியும் பேராற்றல் மிக்கவன், எனவே புத்தன் அல்லது சர்வக்ஞஸ்வரூபன் (நிரஞ்ஜனோஸி) குற்றமற்றவன் இயல்பாக நீ வினை அழுக்காறுகள் இல்லாத தூய்மையானவன், (ஸம்ஸாரமாயா பாவர்ஜிதோஸி) சம்சார மாயைகளினின்றும் நீ வேறுபட்டவன், அதாவது நிலையற்ற பிறவிச் சுழற்சி உன்னில் இல்லை, சுருக்கமாக நீ நிலையானவன். (சாரபின்ன:) இயல்பாகவே நீ உடலின்றும் வேறுபட்டவன், அதாவது உடலுடன் கூடி காணப்பட்டாலும் அதனின்றும் நீ தனித்து இயங்குபவன். (எனவே நீ) (சர்வசேஷ்டாம் த்யஜ) அதாவது உடற் சம்பந்தப்பட்ட செயல்களினின்றும் ஒதுங்கி தன்னிலைச் செயலில் ஒன்றி இயங்குவாயாக. (மந்தாலஸா வாக்யம் உபாஸ்வ) இவ்வாறு உன் தாய் வழங்கும் நல்லுரைகளை ஏற்று, துறவு மேற்கொண்டு, வினைகளை வென்று பரமாத்துவ நிலையை அடைவாயாக.

* இந்த தோத்திரத்தை இதற்கு முன்பே திரு. பரதசக்ரவர்த்தி சாஸ்தியார் அவர்கள் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த தோத்திரமும், பொருளும் அந்நூலின் அடிப்படையிலானதே என்பதை நன்றியுடன் தொவித்துக்கொள்கிறோம்.

** 'சாந்தாலஸா' என்ற பாடபேதமும் உண்டு. திரு. எம்.பீ. பாடீல் எழுதிய ஸ்ரீ குந்த குந்தாசாரிய தேவர் என்னும் நூலில் காண்க.

2.  ஜ்ஞாதாஸி த்ருஷ்டாஸி பரமாத்ம ரூபி,
அகண்ட ரூபோஸி குணாலயோஸி
ஜிதேந்தியஸ்த்வம் த்யஜ மான முத்ராம்,
மந்தாலஸா வாக்ய முபாஸ்வ புத்ர

பொருள் : (புத்ர) மகனே (ஜ்ஞாதாஸி) அறியப்படும் பொருள்கள் அனைத்தையும் அறியுந்தன்மை படைத்த ஞானோபயோக ஸ்வரூபனே நீ; (த்ருஷ்டாஸி) உலகப் பொருள்கள் அனைத்தையும் ஒரு சேரப்பார்க்கும் ஆற்றல்மிக்க தர்சனோபயோக வடிவன் நீ. (பரமாத்ம ரூபி) சக்தி வடிவில் பரமாத்தும ஸ்வபாவம் படைத்தவன் நீ, (அகண்ட ரூபோஸி) உன்னுடைய அஸங்க்யாத பிரதேச வடிவம் துண்டிக்க இயலாதது. கிடைக்கும் உடலுக்கு ஏற்ப சுருங்கி வியும் தன்மை படைத்தவன் நீ. எவ்வுடலாயினும் அதில் உன் அஸங்க்யாத பிரதேசம் அப்படியே அகண்டமாக உள்ளது. (குணாலயயோஸி) அதாவது அனந்த குணங்கள் நிறைந்தவன். விளக்கமாக ஒவ்வொரு திரவியத்திலும் பொதுகுணம் மற்றும் சிறப்பு குணம் என்று உண்டு. நீ அவற்றிற்கு ஆலயம் இருப்பிடமாக விளங்குபவன். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் குணக்கடல் நீ, (ஜிதேந்திய : த்வம்) இயல்பு நோக்கில் நீ பொறிகள் அற்றவன். வியவகார நோக்கில் பொறிகளுடன் கூடி இருந்தாலும் பொறிகள் வழி செல்லாது தன் இயல்பு வழி இயங்குபவன். ஆதலால் ஜிதேந்தியன். (மானமுத்ராம் த்யஜ) பிறவிச் சுக-போகப் பொருள்களைப் பெற்று மமதை கொள்ளாது மான கஷாயத்தை விலக்கி துறவு மேற்கொண்டு ஆன்மநலன் நாடுவாயாக. (மந்தாலஸா வாக்யம் உபாஸ்வ) இதுதான் உன்தாய் மந்தாலசாவின் நல்லுரைகள். இவற்றை நீ உள்ளத்தில் நிறுத்திக்கொள்வாயாக.

3. சாந்தோஸி தாதோஸி விநாச ஹீன:
சித்த ஸ்வரூபோஸி கலங்கமுக்த:
ஜ்யோதி ஸ்வரூபோஸி விமுஞ்ச மாயாம்,
மந்தாலஸா வாக்ய முபாஸ்வ புத்ர

பொருள் : (புத்ர) குழந்தாய் (சாந்தோஸி) நீ ஸ்வபாவ நோக்கில் அமைதிவடிவமானவன், ஆனால் இன்று குரோதம், மானம் முதலிய ஜீவனின் பகைவர்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறாய். எனினும் இவை நிலையானவையே அல்ல, விலக்கத்தக்கவை, விலகும் சுபாவம் உடையவை ஆதலால் இவற்றை நீக்கிப் பார்க்கும்போது உன் அமைதி வடிவம் தெள்ளெனத் தொயவரும். (தாதோஸி) நீ உதாரகுணம் அதாவது கருணை வடிவமானவன், (விநாசஹீன:) நீ அழிவற்றவன், நிலையானவன், (பாயாயங்கள் அழியலாம் ஆனால் வஸ்து அழிவற்றது) (சித்த ஸ்வரூபோஸி) சித்த பரமாத்துமன் ஸ்வரூபம் போன்றதே உன்ஸ்வரூபமும். அந்நிலை அடைய செயல்படுவதுதான் உன் நோக்கமாக இருக்கவேண்டும். (கலங்கமுக்த:) நிச்சயநயநோக்கில் வினை களங்கம் இல்லாதவன் நீ. (ஜ்யோதிஸ்வரூபோஸி) என்றும் மங்காத கேவலஞான ஜோதியுடன் விளங்குபவன் நீ, (மாயாம் விமுஞ்ச) சம்சார மாயையினின்றும் விடுபடுக, (மந்தாலசா வாக்யம் உபாஸ்வ) என் நல்லுரைகளை ஏற்று அவ்வழி நடப்பாயாக.

4.ஏகோஸி முக்தோஸி சிதாத்மகோஸி,
சித்ரூப பாவோஸி சிரந்தனோஸி
அலக்ஷ்ய பாவோ ஜஹி தேஹ மோஹம்
மந்தாலஸா வாக்ய முபாஸ்வ புத்ர


பொருள் :  (புத்ர) மகனே (ஏகோஸி) நீ தனிமையானவன் அதாவது நீ எவரையும் சார்ந்து இல்லை. எனவே நீ ஏகத்வஸ்வபாவம் படைத்தவன். (முக்தோஸி) நிச்சய நயநோக்கில் நீ பிறவிபந்த பாசங்களின்றும் வேறுபட்டவன் (விடுபட்டவன்) சுருக்கமாக பிறவிபந்தங்களிலிருந்து விடுபட்டிருப்பதுதான் உன் இயல்புநிலை. (சிதாத்மகோஸி) சேதன வடிவமானவன் (ஞானமயன்) நீ. (சித்ரூபபாவோஸி) நீ சைதன்ய மய உணர்வுகளை உடையவன். (சிரந்தனோஸி) நீ அனாதியாக தொடர்ந்திருப்பவன். (அலக்ஷ்ய பாவ:) உனக்கு நீயே லக்ஷயப் பொருள், போன்பமடைய நீ வேறு யாரையும் நோக்கவேண்டியதில்லை என்பதை உணருவாயாக. மேலும் (தேஹ மோஹம் ஜஹி) உடல்பால் கொண்டுள்ள மோஹ உணர்வை நீக்குவாயாக. (மந்தாலஸா வாக்யம் உபாஸ்வ) தாய் மந்தாலசாவின் நல்லுரைகளை ஏற்று செயல்படுவாயாக.

5. நிஷ்காம தாமோஸி விகர்ம ரூபோ,
ரத்னத்ரயாத்மோஸி பரம் பவித்ரம்
வேத்தாஸி சேதோஸி விமுஞ்ச காமம்,
மந்தாலஸா வாக்ய முபாஸ்வ புத்ர


பொருள் : (புத்ர) குழந்தாய். (நிஷ்காம தாமூ அஸி) நீ அனைத்து ஆசைகளும் நீங்கியவன். எனவே ஒளிவடிவன் நீ (விகாமரூப) திரவிய நோக்கில் நீ வினைக்கட்டு அற்றவன். (ரத்னத்ரயாத்மோஸி) இரத்தினதிரய வடிவன் நீ, பாசுத்தமானவன். (வேத்தாஸி) நீ அறிபவன், (சேதோஸி) சேதன ஸ்வபாவம் படைத்தவன் நீ. (விமுஞ்ச காமம்) எனவே நீ மோஹ விகாரத்தை விடுவாயாக. (மந்தாலஸாவாக்யம் உபாஸ்வ) உன்தாய் மந்தாலசா கூறும் நற்போதனைகளுக்கு செவிமடுப்பாயாக.

6. பிரமாதமுக்தோஸி சுநிர்மலோஸி,
அனந்த போதாதி சதுஷ்டயோஸி
பிரஹ்மாஸி ரக்ஷ ஸ்வ சிதாத்ம ரூபம்,
மந்தாலஸா வாக்ய முபாஸ்வ புத்ர


பொருள் : (புத்ர) மகனே (பிரமாத முக்தோசி) நீ அஞ்ஞானம் (பிரமாதம்) இல்லாதவன், (சுநிர்மலோஸி) கர்ம களங்கம் இல்லாதவன் எனவே நீ நிர்மலன், (அனந்த போதாதி சதுஷ்டயோஸி) அனந்த ஞானம், தர்சனம் சுகம் மற்றும் வீய குணங்களுடன் விளங்குபவன் நீ, (பிரஹ்மாஸி) பிரம்ம வடிவமானவன், (ஸ்வ சிதாத்ம ரூபம் ரக்ஷ) எனவே உன்னுடைய பரம சைதன்ய வடிவ ஸ்வரூபத்தைக் காப்பாயாக. இப்படிப்பட்ட தூய சிந்தனைகளால் நீ பரமாத்தும பதவியை அடைய முடியும். (மந்தாலஸாவாக்யம் உபாஸ்வ) எனவே நீ, தாய் மந்தாலசாவின் நற்போதனைகளை உள்ளத்தே இறுத்திக்கொள்வாயாக.


7.
கைவல்ய பாவோஸி நிவ்ருத்த யோகோ,
நிராமயீ ஜ்ஞாத ஸமஸ்த தத்த்வ:
பரமாத்ம வ்ருத்திம் ஸ்மர சித்ஸ்வரூபபோ
மந்தாலசஸா வாக்ய முபாஸ்வ புத்ர

பொருள் : (புத்ர) மகனே (கைவல்ய பாவோஸி) நீ கேவல ஞான ஸ்வரூபன் என்பதை அறிந்துகொள்வாயாக. (நிவ்ருத்தயோக:) மெய், மனம், மொழி எனும் யோகங்களின் சஞ்சலம் இல்லாதவன். (நிராமயீ) நோய்முதலிய உபாதைகள் இல்லாதவன், (ஜ்ஞாத ஸமஸ்த தத்த்வ:) அனைத்துத் தத்துவங்களையும் குறையின்றி அறிந்தவன் நீ, (சித்தஸ்வரூப:) நீ சைதன்ய (ஞானதாசன) ஸ்வரூபத்தை உடையவன். எனவே (பரமாத்மவ்ருத்திம் ஸ்மர) நீ பரமாத்தும பாவனையை ஏற்று உன்னுடைய சித் ஸ்வபாவத்தை சைதன்ய பாணதியை தன்னில் நிலைக்கச் செய்வாயாக, (மந்தாலஸா வாக்யம் உபாஸ்வ) தாய் மந்தாலசா வழங்கும் இந்த நல்லுரைகளைப் பேணி செயல்படுவாயாக.

8. சைதன்ய ரூபோஸி விமுக்தபாரோ,
பாவாதிகர்மோஸி சமக்ரவேதீ
த்யாய ப்ரகாமம் பரமாத்ம ரூபம்,
மந்தாலஸா வாக்ய முபாஸ்வ புத்ர

பொருள் : (புத்ர) மகனே (சைதன்ய ரூபோஸி) நீ சைதன்ய குணவடிவன், (பாவாதிகர்ம பார விமுக்தோஸி) திரவிய கர்மம், பாவகர்மம், நோகர்மம் ஆகிய கர்ம பாரத்தை விலக்கியவன், (சமக்ரவேதீ) அனைத்தையும் அறிபவன், எனவே (பரமாத்மா ரூபம்) உன்னுடைய பரமாத்தும ஸ்வரூபத்தை (ப்ரகாமம் தியாய) விருப்பம்போல் (யதேஷ்டமாக) தியானம் செய்வாயாக. (மந்தாலஸா வாக்யம் உபாஸ்வ) உன் தாய் வழங்கும் நல்லுரைகளை மனமுவந்து ஏற்பாயாக.

இந்த தோத்திரத்தின் பயன் இனிவரும் இரு சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது.

9.இத்யஷ்டகைர்யா புதஸ்தனூஜாம்
விபோத நார்த்தம் நரநாத பூஜ்யம்,
ப்ராவ்ருஜ்ய பீதா பவபோக பாவாத்,
ஸ்வகை: ததாஸெள சுகதி ப்ரபேதே

10. இத்யஷ்டகம் பாபபராங்முகோயோ,
மந்தாலஸேதம் பணதி ப்ரமோதாத்
ஸ ஸத்கதிம் ஸ்ரீ சுபசந்த்ர பாசீ,
ஸம்ப்ராப்ய நிர்வாண கதிம் ப்ரபத்யே


தாய் மந்தாலசா தம் மக்களுக்கு ஆன்மநலனை வலியுறு;த்தி, உன் ஸ்வபாவம் ஏப்படிப்பட்டது என்பதை தெளிவாக விளக்கி தாலாட்டின் மூலம் மனதில் பதியவைத்தாள். இக்கருத்துக்களை செவியுற்ற மக்கள் வஸ்துவின் யதார்த்த நிலை அறிந்து, தற்கால பிறவி நிலையிலிருந்து விடுபட உள்ளத்தில் உறுதி கொண்டனர். இதனால் தத்துவம், அதத்துவம், புண்ணிய-பாவம், சராகநிலை-வீதராகநிலை அனைத்தையும் தாய் மந்தாலசா வழி தெளிவடைந்தனர். அரச பரம்பரையில் பிறந்து இவ்வுலக சுகபோகங்களை அனுபவிப்பதில் நாட்டங்கொள்ளாமல் துறந்து சென்று கடுந்தவம் புந்து சுத்தோபயோக நிலை அடைந்து வினைகளைக் கெடுத்து வரம்பில் ஞான-தாசன-சுகங்களை அனுபவிப்பவர்களாக தங்களை உயர்த்திக்கொண்டனர்.

இந்த உபதேசம் க்ஷத்திய (அரசகுல) மக்களுக்கு மட்டுமல்லாமல் பகுத்தறிவெனும் கூர்வாள் கொண்டு அனைத்துப் புறப்பொருள், பாயாயங்களினின்றும் தன்னை தனியாகப் பித்து செயல்படுகின்ற எல்லா உயிர்களுக்கும் நிலையான அழியா இன்பத்தைத் தரும் என்பது உறுதி.

ஆசார்ய சுபசந்திரார் இயற்றிய இந்த மந்தாலசா தோத்திரத்தை அந்தரங்க உணர்வோடு இணைத்துக்கொள்பவர்கள் தாய் மந்தாலசா மற்றும் அவருடைய மக்கள் போல உயர்ந்து விளங்குவார்களாக.

'புங்கவன் பயந்த நன்னூல் புகழொடு பொலிகமிக்கே'.

சுபம்.

ஆதார நூல்களின் பட்டியல்

நூல் ஆசியர் மொழி
1. ஸமயபாகுடம் ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தர் பிராக்ருதம்
2. நியமஸாரம் ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தர் பிராக்ருதம்
3. ஷட்ப்ராப்ருதம் ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தர் பிராக்ருதம்
4. அஷ்டபாகுடம் ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தர் பிராக்ருதம்
5. பிரவசனசாரம் ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தர் பிராக்ருதம்
6. பஞ்சாஸ்திகாய சங்கிரஹம் ஆசாரிய ஸ்ரீ குந்த குந்தர் பிராக்ருதம்
7. இரத்தின கரண்டக சிராவகாசாரம் ஸ்ரீ சமந்தபத்ராசாரியர் சமஸ்க்ருதம்
8. ஸாகார தர்மாம்ருதம் பண்டித் ஆசாதரர் சமஸ்க்ருதம்
9. அறம் பரப்பிய ஆசாரியர்கள் தத்துவமேதை திரு. கஜபதி ஜைன் தமிழ்
10. திருக்குறள் ஆராய்ச்சியும்
ஜைன சமய சித்தாந்த
விளக்கமும் (முதற்பாகம்)
திரு. அனந்தநாத நயினார்  தமிழ்
11. நியமஸார அணிந்துரை திரு. மல்லிநாத சாஸ்தியார் தமிழ்
12. இரயணஸார முன்னுரை திரு. மல்லிநாத சாஸ்தியார் தமிழ்
13. திருக்குறள் கடவுள் வாழ்த்து (தொகுப்பு) புலவர். திரு. தன்யகுமார் தமிழ்
14. ஆசார்ய குந்த குந்த தேவ் திரு. எம்.பி. பாடீல் இந்தி
15. குந்த குந்த ப்ராப்ருத ஸங்க்ரஹ் திரு. பண்டித்கைலாஷ்சந்த் இந்தி
16. சமந்தபத்ர-கட்டுரை
முக்தார்
திரு. பண்டிட் ஜூகல்கிஷோர் இந்தி
17. ஆசார்ய குந்த குந்த்
ஓளர் உன்கே டீகாகார்
டாக்டர். சுத்தாத்ம ப்ரபா இந்தி
18. தீர்த்தங்கரர் மகாவீர்
உன்கீ ஆசார்ய பரம்பரா
டாக்டர். நேமிசந்த சாஸ்தியார் இந்தி
19. புத்திவிலாஸ் கவி பகத்ராம் சாஹ் இந்தி
20. பிரவசனசார் முன்னுரை டாக்டர். ஏ.என்.உபாத்யே ஆங்கிலம்
21. பஞ்சாஸ்திகாய முன்னுரை நைனார் பேராசியர் சக்ரவர்த்தி ஆங்கிலம்
22. மந்தாலசா தோத்திரம் (தமிழாக்கம்:திரு.பரதசக்ரவர்த்தி சாஸ்தியார்) ஆசாரிய ஸ்ரீசுபசந்திரர் சமஸ்க்ருதம்
23. ஜைன் தர்மகா இதிஹாஸ்                          - இந்தி
24. ஜைன் சிலாலேக் சங்கரஹம்                         - இந்தி

www.jainworld.com